கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் ராஜமௌலி ட்வீட் செய்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ராஜமௌலி. பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவர் இயக்கிய பாகுபலி உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இவர் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நடிப்பில் RRR என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர், ராஜமௌலிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியிருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் எடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் டெஸ்ட் குறித்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், ''இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, இப்போது எந்த அறிகுறியும் இல்லை. இருந்தாலும் எனக்கும் எனது குடும்பத்திற்கு எடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் டெஸ்ட் ரிசல்ட் நெகட்டீவ் என வந்திருக்கிறது'' என பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த சந்தோஷமான விஷயத்தை அறிந்த அவர்கள் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
Completed 2 weeks of quarantine! No symptoms. Tested just for the sake of it... It is negative for all of us...
Doctor said we need to wait 3 weeks from now to see if we've developed enough antibodies for plasma donation!
— rajamouli ss (@ssrajamouli) August 12, 2020