பாகுபலி இயக்குனர் ராஜமவுலியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி தற்போது RRR படத்தின் போஸ்ட் புரடக்ஷன்ஸ் வேளைகளில் இருக்கிறார். மிகுந்த பொருட்செல்வத்தில் உருவாகும் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு வீட்டில் இருக்கும் அவரை தொலைக்காட்சி நிறுவனங்கள் பலவும் தங்களுக்கு பேட்டி அளிக்கும்படி அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ரசிகர்கள் முன்பு தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இப்பொழுது இயக்கி முடித்த RRR படத்தின் வேலைகள் முடிந்த பின்பு, தான் முன்பு சொல்லியிருந்தபடியே பழம்பெரும் தயாரிப்பாளர் KL நாராயனனின் துர்கா ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு அடுத்த படத்தை இயக்க இருப்பதாகவும் அதில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிப்பார் என்றும் அதிரடியாக கூறியுள்ளார்.
தற்சமயம் RRR படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். 1920-களில் இருந்த 2 சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது. இதில் ஒருவர் வேடத்தில் ராம் சரணும் மற்றவர் வேடத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். மேலும் படத்தில் ஆலியா பட் அஜய்தேவ்கன் சமுத்திரக்கனி போன்ற பலரும் நடிக்கின்றனர். இந்த படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.