சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான படம் 'பாபா'. அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார்.
Images are subject to © copyright to their respective owners
கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். மகா அவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான சமயத்தில், அதிகம் பரவலாக பேசப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு (டிசம்பர் 12) பாபா திரைப்படம், புது பொலிவுடன் திரை அரங்குகளில் மீண்டும் ரிலீஸ் ஆகி இருந்தது. முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, இந்த நவீன தொழில் நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டடிருந்தது. ஒரு சில இடங்களில் சில வசனங்களும் மாற்றப்பட்டிருந்தது.
Images are subject to © copyright to their respective owners
இந்த நிலையில் பாபா படத்தின் ரீ ரிலீஸிற்கு கிடைத்த அசத்தல் வரவேற்பு வந்ததையடுத்து படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான ரஜினிகாந்த்தும் படக் குழுவினரை அழைத்து அவர்களுடன் சக்சஸ் பார்ட்டியை கொண்டாடி உள்ளார். இதில் படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும், பாபா படத்தை நினைவு பரிசாகவும் பாபா படத்தை வழங்கி இருந்தார்.
Images are subject to © copyright to their respective owners
அதே போல, இந்த சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்த் காலா படத்தில் வருவது போல கருப்பு நிறத்தில் ஜிப்பா ஒன்றை அணிந்தபடி இருந்த அவரது லுக்குகளும் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.