விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சி வாராவாரம் சுவாரசியம் குறையாமல் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. கோமாளிகள் மட்டுமல்லாது போட்டியாளர்களும் சேர்ந்துகொண்டு செய்யும் ரகளைகள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அதிலும் பலரைப் பற்றி மக்கள் வைத்திருக்கும் பிம்பமே இந்த சீசன் 2 மூலமாக மாறியுள்ளது. சீரியஸான மனிதர்களாக இருப்பார்கள் என்று நினைத்த பலரும் மிகவும் எளிமையான, சுவாரசியமான, ரசிக்கக்கூடிய மனிதர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல் கோமாளிகள் உடனே போட்டியாளர்கள் பழகும் விதமும் ரசிக்கும்படி உள்ளது.
இந்நிலையில் கடந்த சீசன் கோமாளிகளான புகழ், பாலா, மணிமேகலை, ஷிவாங்கி போன்றோர் இந்த சீசனிலும் பங்கெடுத்துள்ளனர். குக் வித் கோமாளி சீசன் 2 கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. எனினும் இந்த சீசன் பலருக்கும் எப்போது பேவரைட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த சீசனை பொருத்தவரை ஒவ்வொரு போட்டியாளரும் ஒருவகையில் ஆச்சரியத்தை அளிக்கிறார்கள். ஷகிலா தொடங்கி இளம் நடிகரான அஸ்வின் வரை சமைத்து அசத்துகிறார்கள். அதிலும் திரைத்துறையில் பலரையும் ஆட்டுவித்த புகழ்பெற்ற நடன அமைப்பாளரான பாபா பாஸ்கர் இந்நிகழ்ச்சியில் செய்யும் ரகளை சமையல் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். அவரும் கனியும் Tom & Jerry போல அடித்து கொள்வது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி குழுவினர் பங்கேற்றுள்ளனர். தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் கனி யதார்த்தமாக கூறிய வார்த்தைகளுக்கு பாபா பாஸ்கர் மாஸ்டர் டென்ஷன் ஆவது போல காட்டப்படுகிறது. எனினும் இருவருமே செம ஜாலியான நபர்கள் என்பதால் இது நிச்சயம் பிராங்க் தான் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.