விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெகாதொடர் பாக்கியலட்சுமி.
Also Read | உலகப்புகழ் பெற்ற பீச்சில் நடிகை கனிகா.. ரிசார்ட்டில் ஒரு நாள் வாடகை மட்டும் இம்புட்டா?
இந்த மெகாதொடருக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் ஆதரவு உள்ளது.
இதில் பாக்கியலட்சுமி எனும் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருபவர் நடிகை கே.எஸ். சுசித்ரா. பாக்கியலட்சுமி மாதிரி ஒரு அப்பாவியான, அதே வேளையில் மிகவும் அன்புடன் தனது குடும்பத்தினரை பார்த்து கொள்ளும் மனைவியை விவாகரத்து செய்து விட்டார் கோபி. இதனால் கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார் பாக்கியலட்சுமி.
பாக்கியலட்சுமி, ராதிகா என இருவரையும் பலே ஆளாக நாடகம் போட்டு கோபி நீண்ட காலம் ஏமாற்றி வந்தார். அந்த நாடகம் முடிவுக்கு வர, வசமாக சிக்கி கொண்டார் கோபி. இதன் பின்னர், பாக்கியலட்சுமி தொடரில் ஏகப்பட்ட திருப்புமுனைகள் அடுத்தடுத்து அரங்கேறி கொண்டிருக்கிறது. கோபிக்கு விவாகரத்து கிடைத்து விட்ட நிலையில், குடும்பத்தை பிரிந்து வந்த அவர், மீண்டும் ராதிகாவை திருமணம் செய்ய உள்ளார்.
இந்த திருமணத்திற்கான சமையல் காண்ட்ராக்ட்டையும் பாக்கிய லட்சுமி எடுத்துள்ளார்.
இச்சூழலில் கோபியின் அப்பா ராமமூர்த்தி & அம்மா ஈஸ்வரி & இனியா
இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால் ஆட்டோவில் கோபத்துடன் கல்யாண மண்டபம் வரும் ராம மூர்த்தி, ஈஸ்வரி & இனியா, கோபியின் திருமணம் முடிந்து விடுவதை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரி, கோபியை நோக்கி, "நீ இப்படி பண்ணுவேனு கனவுல கூட நினைக்கல டா.. படுபாவி படுபாவி. இனி என்ன அம்மான்னு கூப்பிடாத" என திட்டுகிறார். ராமமூர்த்தி, "நீ நல்லா இருக்க மாட்ட. நாசமா போயிடுவ" என சாபமிடுகிறார். இவ்வாறு இந்த வார ப்ரோமோ வீடியோ காட்சிகள் அமைந்துள்ளன.
பாக்கியா 🔥
பாக்கியலட்சுமி - இன்று இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/QGFQtwhkIc
— Vijay Television (@vijaytelevision) October 3, 2022
Also Read | மீண்டும் DNA டெஸ்ட்.. குத்திக்காட்டிய கண்ணம்மா.. உச்சக்கட்ட பிரஸரில் பாரதி! முடிவு என்ன?