www.garudavega.com

மருத்துவமனையில் உயிர்பிழைத்ததும் இனியா எடுத்த பரபரப்பு முடிவு.. இடிந்து போன கோபி.. BAAKIYALAKSHMI

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா எடுத்திருக்கும் முடிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Baakiyalakshmi Serial episode Update Iniya new decision

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா மற்றும் கோபி இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். ஆனால் கோபி பாக்கியாவை விட்டுவிட்டு ராதிகாவை காதலித்து வந்ததால் ஒரு கட்டத்தில் பாக்கியாவை விவாகரத்து செய்தார். அதன் பிறகு அவர் ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனியே வாழ்ந்து வந்தார்.

Baakiyalakshmi Serial episode Update Iniya new decision

ஆனாலும் தன்னுடைய அப்பாவுடன்தான் இருப்பேன் என்று சொல்லிவிட்டு இனியா தன் அப்பா கோபியின் வீட்டில் கொஞ்ச நாள் இருந்தார். ஆனால் அங்கு இருக்கும்போது இனியாவின் தனி உரிமை ராதிகா அவ்வப்போது கேள்விகள் கேட்பதாலும், கண்டிப்பதாலும் பறிபோவதாக ஃபீல் பண்ணிய இனியா தன் அம்மா பாக்கியலட்சுமியிடம் எல்லா உண்மைகளையும் சொல்லத் தொடங்கி அவரையே நம்ப தொடங்கினார்.

Baakiyalakshmi Serial episode Update Iniya new decision

ஒரு கட்டத்தில் தன் அம்மாவே சரியாக இருப்பதாகவும் ராதிகா எதற்காக தன்னை கேள்விகள் கேட்க வேண்டும் என்றும் இனியா தன் அப்பா கோபியிடம் சண்டை போட தொடங்கினார். ஆனாலும் ராதிகா அம்மா ஸ்தானத்திலிருந்து உன் நல்லதுக்காக தானே சொல்கிறாள் என்று கோபி இனியாவுக்கு சமாதானம் கூறி வர, இதை ஏற்காத இனியா ஒரு கட்டத்தில் விபரீத முடிவு எடுத்தார்.

Baakiyalakshmi Serial episode Update Iniya new decision

இதனால் மொத்த குடும்பமும் பதறியத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வர, இறுதியாக அப்பாவுடனா? அம்மாவுடனா? யாருடன் உனக்கு செல்ல விருப்பம் என்று இனியாவிடம் கேட்டபோது, இனியா தன் அம்மா பாக்கியலட்சுமியுடன் செல்வதாக கூறியதும் கோபி அதிர்ந்து போய் அழ தொடங்கி விட்டார். அம்மா பாக்கியலட்சுமியுடன் இனியா போகும்போது கோபி இடிந்து போய் நிற்கிறார். இந்த எபிசோடுகள் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi Serial episode Update Iniya new decision

People looking for online information on Baakiyalakshmi Promo, Baakiyalakshmi serial today, Baakiyalakshmi Serial Today Episode will find this news story useful.