www.garudavega.com

BAAKIYALAKSHMI : "இப்படித்தான்பா அமிர்தாக்கு கல்யாணம் ஆச்சு".. ரித்திகா பகிர்ந்த வேற லெவல் வீடியோ!!..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொதுவாக எப்போதுமே டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று பிரத்யேக ரசிகர் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

Baakiyalakshmi rithika share video in set before marriage

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "டாடா படத்தை பாத்ததும்".. கணவருடன் இணைந்து வாழ விரும்பும் பெண்.. எமோஷனல் ஆன இயக்குனர்!!

அதிலும் ஒவ்வொரு எபிசோடுகளும் விறுவிறுப்பாக செல்லும் பட்சத்தில் அந்த தொடர்கள் பலரின் ஃபேவரைட் லிஸ்ட்டிலும் நிச்சயம் இருக்கும். அந்த வகையில், ஒரு குறிப்பிடத்தக்க தொடர் தான் பாக்கியலட்சுமி. மக்களின் அமோக வரவேற்பை பெற்று விளங்கி வரும் இந்த தொடரில், குடும்ப தலைவலியாக இருக்கும் பாக்கியா முதன்மை கதாபாத்திரத்தில் வருகிறார்.

இவரது கணவர் கோபி தற்போது பாக்கியாவை பிரிந்து ராதிகாவுடன் சேர்ந்து வாழ்ந்து வரும் சூழலில், பாக்கியா இருக்கும் தெருவிலேயே ஒரு வீட்டில் குடியேறி வசித்து வருகிறார் கோபி. மறுபக்கம் கணவரின் துணையின்றி தன்னுடைய குடும்பத்தையும், தொழிலையும் முன்னேற்ற தனியாளாகவும் பாடுபட்டு வருகிறார் பாக்கியலட்சுமி.

Baakiyalakshmi rithika share video in set before marriage

Images are subject to © copyright to their respective owners.

இந்த தொடரில் பாக்கியலட்சுமிக்கு மிகுந்த ஆதரவுடன் இருப்பது அவரது மகனான எழில் தான். எந்தவொரு சூழ்நிலையிலும் தாயை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து அவருக்கு பக்கபலமாக இருந்து வரும் எழில், வீட்டை தனது தந்தை கோபியிடம் இருந்து பணம் கொடுத்து வாங்கி தாய் பாக்கியவுடன் கொடுக்கவும் முற்படுகிறார். இதற்காக தான் எடுக்க போகும் சினிமாவை அவர் நம்பிக் கொண்டிருக்கும் சூழலில், எழிலின் தயாரிப்பாளரின் மகள் எழில் மீது விருப்பப்பட எழிலோ தன் காதலிக்கும் அமிர்தாவையே திருமணம் செய்ய நினைக்கிறார்.

Baakiyalakshmi rithika share video in set before marriage

Images are subject to © copyright to their respective owners.

இதன் பெயரில், படத் தயாரிப்பாளருக்கு கோபம் வர படம் தற்காலிகமாக நிறுத்தப்பட அடுத்து அவரது மகளையே திருமணம் செய்யவும் எழில் வற்புறுத்தப்படுகிறார். அதற்கான திருமண ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கும் சூழலில், தனது காதலி அமிர்தாவை பிரிந்து வர்ஷினியுடன் எழில் மணமேடையில் இருக்கும் சமயத்தில் அங்கே அமிர்தா வர அடுத்தடுத்து பரபரப்பான சூழலும் உருவாகி இருந்தது.

இறுதியில், தனது தாய் பாக்கியலட்சுமி துணையுடன் காதலி அமிர்தாவையே திருமணமும் செய்கிறார் எழில். இந்த திருமணத்திற்கு மத்தியில் நகர்ந்த எபிசோடுகள் அனைத்துமே பார்வையாளர்களைக் கூட பரபரப்பில் தான் ஆழ்த்தி இருந்தது.

Baakiyalakshmi rithika share video in set before marriage

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ரித்திகா, தான் தாலி கட்டிக் கொண்டது தொடர்பான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் ரித்திகாவிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றிருந்தது. இதனிடையே, பாக்கியலட்சுமி தொடரில் ரித்திகாவுக்கு திருமணம் ஆன சமயத்தில் எழில் தாலி கட்டும் காட்சிகள் வரும்.

தற்போது ரித்திகா பகிர்ந்துள்ள வீடியோவில், ஷூட்டிங்கிற்கு நடுவே அவரே அவருக்கு தாலி கட்டும் காட்சி ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் தனது கேப்ஷனில், "இப்படித்தான் அமிர்தா திருமணம் செய்து கொண்டார்" என்றும் ஜாலியாக குறிப்பிட்டுள்ளார்.

Also Read | "பேசுறவங்களே1,000 Gossip பேசி இருக்காங்க".. ADK பேசி முடிச்சதும் அசிம் கொடுத்த பதிலடி!!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi rithika share video in set before marriage

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Vijay Television will find this news story useful.