www.garudavega.com

போடு!! ஸ்டைலாக எண்ட்ரி கொடுத்த பாக்கியலட்சுமி! அதிர்ந்த ராதிகா..!! BAAKIYALAKSHMI

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியலட்சுமி தன்னுடைய கணவர் கோபியை விட்டு பிரிந்து வாழ்கிறார்.

Baakiyalakshmi new viral look trending பாக்கியலட்சுமி

Also Read | Super Mom : “ரொம்ப கஷ்டப்பட்டேன் ஆர்யன்.”.. மகனிடம் பிக்பாஸ் மணிகண்டாவின் மனைவி உருக்கம்.!

கோபியோ பாக்கியலட்சுமியை அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை முறையாக திருமணம் செய்து கொண்டு அதே தெருவில் இருக்கும்  வீட்டில் குடியேறி வசித்து வருகிறார். 

Baakiyalakshmi new viral look trending பாக்கியலட்சுமி

இதனிடையே கோபி & பாக்கியலட்சுமியின் மகளான இனியா, தந்தை கோபியை வீட்டுக்கு அழைத்து வந்தே தீர வேண்டும் என்கிற முடிவுடன் கோபியுடன் சென்று வசித்து வருகிறார். இனியா சென்றதால் கோபியின் அப்பாவும் இனியாவின் தாத்தாவுமான பாக்கியலட்சுமியின் மாமனார் அதே வீட்டில் சென்று வசிக்க தொடங்கி விட்டார்.

Baakiyalakshmi new viral look trending பாக்கியலட்சுமி

இன்னொரு பக்கம் பாக்கியலட்சுமி செய்து வந்த சமையல் காண்ட்ராக்ட் பணி தற்போது சிக்கலை சந்தித்து மீண்டு எழுந்து வருகிறது. ராதிகாவுடனான தேர்தல் போட்டியில் பாக்கியலட்சுமி வெற்றி பெற்றார்.

Baakiyalakshmi new viral look trending பாக்கியலட்சுமி

ராதிகா இப்போதுதான் மெல்ல மெல்ல கோபியின் இன்னொரு முகத்தை அறிந்து கொண்டு வருகிறார். இதேபோல் அதிக வருமானத்தை வைத்தும் குடும்ப செலவுகளை மேனேஜ் பண்ண முடியாமல் ராதிகா திணற, ஆனால் கோபி முன்பு கொடுத்த குறைந்த பணத்தை கொண்டு பாக்கியலட்சுமி குடும்பத்தை நன்றாக நிர்வகித்ததுடன் வகை வகையாக சமைத்து போட்டார்.

Baakiyalakshmi new viral look trending பாக்கியலட்சுமி

இதனிடையே கணவர் கோபியின் உதவியின்றி, கணவரின் குடும்பத்தையும், தனது தொழிலையும் முன்னேற்ற பாடுபடுகிறார் பாக்கியலட்சுமி. அதன் ஒரு பகுதியாக மீண்டும் சமைத்து டேக் அவே உணவு பொருள் கடையை வீட்டிலேயே பல எதிர்ப்புகளை மீறி நடத்துகிறார். 

Baakiyalakshmi new viral look trending பாக்கியலட்சுமி

இந்நிலையில் பியூட்டி பார்லர் செல்லும் பாக்யாவுக்கு அருகே அமர்ந்து ராதிகா தன் திருமண வாழ்க்கை குறித்து அதிருப்தி தெரிவிக்கிறார். ஆனால் அருகில் இருப்பது பாக்யா என அவருக்கு தெரியாது.

Baakiyalakshmi new viral look trending பாக்கியலட்சுமி

தெரிந்த பின்னர் அதிரும் ராதிகா, இவருக்கு பியூட்டி பார்லர்லாம் வரும் அளவுக்கு நேரம் இருக்கா? என ஆச்சரியப்படுகிறார். அவ்வகையில் பாக்யாவின் புதிய ஸ்டைலான லுக்குடன் கூடிய ப்ரோமோ இந்த சீரியல் ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.

Also Read | வந்ததும் நாரதர் வேலையா? சுரேஷ் தாத்தாவை ஜாலியாக கிண்டல் அடித்த நெட்டிசன்கள்.😍

மற்ற செய்திகள்

Baakiyalakshmi new viral look trending பாக்கியலட்சுமி

People looking for online information on Baakiyalakshmi serial today, Baakiyalakshmi today episode will find this news story useful.