விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியலட்சுமியின் கணவர் கோபிக்கு ராதிகாவுடன் இருந்த உறவு தற்போது அனைவருக்கும் தெரிய வந்து விட்டது. இதனை தொடர்ந்து கோபியிடம் கோபித்துக்கொண்டு பாக்கியலட்சுமி எரிமலையாய் பொங்கி வெடித்து வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
இன்னொருபுறம் ராதிகாவுக்கும் இந்த விஷயம் இப்போது தான் தெரிந்தது. தம்முடைய நெருங்கிய தோழி பாக்கியலட்சுமியின் கணவர்தான் கோபி என்கிற விஷயம் தெரிந்து ராதிகாவும் அதிர்ந்து போய்விட்டார். அதனால் அவரும் கோபியை திட்டிவிட்டார். இந்த நிலைமையில் பாக்கியலட்சுமியின் மகள் இனியா தன் தந்தை கோபியிடம் சென்று கோபமாக பேசிவிட்டு, பின்னர் தன் அண்ணி ஜெனியிடம் சென்று பேசுகிறார்.
அதில், “எனக்கு அப்பாவை ரொம்ப பிடிக்கும். எங்க அம்மாவ எப்போதும் திட்டுவேன்.. ஆனா அம்மாக்கு என்ன ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. நான் திட்டினாலும் என்ட்டவந்து பேசிட்டே இருப்பாங்க..” என கூறுகிறாள். இதை பார்த்த ரசிகர்கள், தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்றும் சொல்லுவார்கள். எத்தனை உறவுகள் இருந்தாலும் அம்மா என்ற உறவுக்கு ஈடு ஆகாது. அப்பா அம்மாவுக்கு துரோகம் பண்ணுனதை எந்த பெண் பிள்ளைனாலும் தாங்க முடியாது... யாருக்கு இப்படி நடக்க கூடாது.... என்று கமெண்டுகள் கொடுத்து வருகின்றனர்.
இன்னும் சிலர், “ஒரு பொண்ணுக்கு என்னதான் அப்பா மேல பாசம் இருந்தாலும்.. அம்மா இல்லனா அவளுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்”, “இப்போயாவது உங்க அம்மாவ புரிஞ்சிகிட்டியே இனியா...”, “இருக்கும் போது ஒருவரின் அருமை தெரியாது அதுவே இல்லாதபோது தான் தெரியும்.. அது தான் இனியாவின் தேடல்”, “இப்பவாச்சு இந்த இனியா பயபுள்ளைக்கு அம்மாவோட அன்பு பாசம் புரிஞ்சிச்சே மகிழ்ச்சி” என கூறி வருகின்றனர்.
இன்னும் சிலர், “இந்த மாதிரியான தருனத்துலதான் வீட்ல இருக்ர மருமகள் எல்லாருக்கும் ஞாபகம் வரும்.. இனியாவிற்க்கு ஒரு நல்ல அண்ணி ஜெனி என்றும், சிலர், “பாக்யா இப்போ கில்லி ஆய்ட்டாங்க ....ராதிகா இனி வில்லி ஆய்டுவாங்க” என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.