www.garudavega.com

"நீங்க WIFE-னா உள்ள போனது?".. பாக்யா அதிர்ச்சி.. கோபி சோலி முடிஞ்ச்!.. ரசிகர்களுக்கு பதில்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாக்கியலட்சுமி சீரியல் குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு பாக்கியலட்சுமி சீரியலின் ஹீரோ கோபியாக நடிக்கும் சதீஷ் பதில் அளித்திருக்கிறார். அவரது பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

baakiyalakshmi came to know radhika gopi relation promo

Also Read | OTT-யில் வெளியாகும் நானி - நஸ்ரியா நடித்த சூப்பர் ஹிட்டான 'அடடே சுந்தரா' திரைப்படம்.. எப்போ? எதுல?

விஜய்  டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சிரியலுக்கு என்றே பிரத்தியேகமான ரசிகர்கள் உள்ளனர். எளிமையான வலிமை இல்லாத இல்லத்தரசியின் வாழ்க்கையை இந்த சீரியல் சொல்லி வருகிறது. ஆனால் அந்த இல்லத்தரசி பாக்கியலட்சுமி நினைத்தால் பூகம்பமே உருவாகும். இருப்பினும் கணவர், குடும்பம் என அறவழியில் அனைவரையும் அரவணைத்து வாழும் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடித்து வருகிறார். இவரின் கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்து வருகிறார்.

தற்போது இந்த சீரியல் உச்ச கட்ட பரபரப்பினை எட்டி வருகிறது. ராதிகவுடன் தொடர்பில் இருக்கும் கோபியின் விஷயம் ஒவ்வொன்றாக உடைய ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக கோபி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்பது அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியவர, அந்த நேரம் பார்த்து கோபி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருப்பதை அறிந்து ராதிகா,பாக்கியா இருவரும் மருத்துவமனைக்கு வருகிறார்கள்.

baakiyalakshmi came to know radhika gopi relation promo

அப்போது ராதிகாவே, கோபியின் மருத்துவ செலவை பார்த்துக்கொள்ள, அதுவரை உண்மை அறியாத பாக்கியாவுக்கு அப்போது தான் கோபி காதலிக்கும் அந்த நபரே தன் மரியாதைக்குரிய தோழி ராதிகா என்கிற உண்மை பாக்கியாவிற்கு தெரிய வருகிறது. இதனால் பாக்கியலட்சுமி அதிர, ஆனால் ஏற்கனவே தன் தோழி பாக்கியாவின் கணவர் தான் இந்த கோபி என்பதை அறிந்து அதிர்ந்து முடித்துவிட்ட ராதிகா இம்முறை கூலாக இருக்கிறார். கொஞ்சம் குற்றவுணர்ச்சியில் நெளிகிறார்.

baakiyalakshmi came to know radhika gopi relation promo

இப்படி சீரியல் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்க, ரசிகர் ஒருவர் கோபி எப்படி தனக்கு பிடிக்காத பாக்கியாவுடன் மூன்று குழந்தை பெற்றார் என கேட்டுள்ளார்.  இதற்கு பதில் அளித்துள்ள சதீஷ், “திருமணம் ஆகும்போது கோபிக்கும், பாக்யாவுக்கும் என்ன வயது என்று ரைட்டர் சொல்லவில்லை. நான் ஏதாவது சொல்லி சர்ச்சையில் சிக்க விரும்பல.. ஆனால் அந்த வயதில் கோபிக்கு உடல் தேவை இருந்திருக்கும். எனவே மூன்று குழந்தைகள் பெற்றிருக்கலாம்... எல்லாவற்றையும் தாண்டி.. இது ஒரு சீரியல், நான் இதில் எனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்.. அவ்வளவுதான்.. எனவே என்னை திட்டாதீர்கள்” என்று கூறியிருக்கிறார்.  இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Also Read | ஒரே ஒரு Bday.. ஓவர் நைட்டில் பாப்புலர்.. fans meet-ல் ஹெல்மெட்டை இழந்த TTF வாசன் .. உருக்கமான வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi came to know radhika gopi relation promo

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial episode today, Baakiyalakshmi serial promo, Baakiyalakshmi serial today, Baakiyalakshmi today promo will find this news story useful.