www.garudavega.com

"FINALE முடிச்சிட்டு".. பிகில் விஜய் வசனத்தை பேசி அசத்திய அசிம்!!.. செம CONFIDENCE-ப்பா!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசன் நிகழ்ச்சியில் இந்த வாரம் Freeze டாஸ்க் சமீபத்தில் நடந்து முடிந்தது.

Azeem speak bigil vijay dialogue about bigg boss finale

Also Read | "என் மக அவ.. கதிர் & ஷிவின் பிரதர், சிஸ்டர் மாதிரி".. கதிரவன் தாய் பெருமிதமாக சொன்ன விஷயம்!!

பிக் பாஸ் வீட்டில் உள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் உள்ளிட்டோர் வந்து பகிர்ந்து கொண்ட விஷயம், பெரிய அளவில் வைரலாகி இருந்தது.

முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், அவர்களுக்காக கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.

அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்திருந்தது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி இருந்தது. மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள், அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், மணிகண்டா ராஜேஷின் தாய், சகோதரியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராஜேஷ், மனைவி, குழந்தை உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர்.

Azeem speak bigil vijay dialogue about bigg boss finale

அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரரும், ஏடிகே, விக்ரமன் மற்றும் கதிரவனின் பெற்றோர்களும், அசிமின் சகோதரர் மற்றும் நண்பர் உள்ளிட்டோரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்திருந்தனர்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் வருகை தந்த போட்டியாளர்களின் குடும்பத்தினர், ஹவுஸ்மேட்ஸ் குறித்தும் நிறைய விஷயங்களை பேசி இருந்தனர். தங்களின் பேவரைட் போட்டியாளர்கள் யார் என்பது குறித்தும், எப்படி அவர்கள் கேம் ஆடுகிறார்கள் என்பது பற்றியும் தங்களது கருத்துக்களை அவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.

Azeem speak bigil vijay dialogue about bigg boss finale

இந்த வார பிக் பாஸ் எபிசோடுகள் அமோக வரவேற்பையும் பார்வையாளர்கள் மத்தியில் பெற்றிருந்தது. இதற்கு மத்தியில், பிக் பாஸ் வீட்டிற்குள் அசிமை பார்க்க அவரது சகோதரர் மற்றும் நண்பர் ஆகியோர் வருகை தந்திருந்தனர். அப்போது, அவர்கள் இருவரும் அசிமிடம் மிகவும் வேடிக்கையாகவும் நடந்து கொண்டிருந்தனர். இதே போல, மிகவும் ஜாலியாகவும் பிக் பாஸ் வீட்டிற்குள் வலம் வந்த அவர்கள், அசிமை தவிர மற்ற போட்டியாளர்கள் விளையாட்டு எப்படி இருக்கிறது என்பது பற்றியும் நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Azeem speak bigil vijay dialogue about bigg boss finale

இதே போல, தனது நண்பர் மற்றும் சகோதரர் ஆகியோருடன் தனியாக அமர்ந்து தனது குடும்பத்தினர் குறித்தும் கேட்டுத் தெரிந்து கொண்ட அசிம், ஊரில் தன்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்றும் கேட்டிருந்தார். மற்ற போட்டியாளர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் வருகை தந்த போது எப்படி கலகலப்பாக இருந்ததோ, அதே போல அசிமின் சகோதரர் மற்றும் நண்பர் வந்த போதும் சுவாரஸ்யம் நிறைந்து விளங்கியது.

இதற்கு மத்தியில், கேமராவை பார்த்து அசிம் பேசியுள்ள விஷயங்கள் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. சகோதரர் உள்ளிட்டோர் இருக்கும் போது கேமராவை பார்த்து பேசும் அசிம், "Finale முடிச்சுட்டு 'Cup முக்கியம் பிகிலு'. வந்து பாக்குறேன்" என பிகில் படத்தில் விஜய் பேசும் வசனத்தை குறிப்பிடும் அசிம், தான் வெற்றி பெறுவதை தன்னம்பிக்கையுடனும் குறிப்பிடுவது போன்றும் தெரிகிறது.

Also Read | "எத வெச்சு விக்ரமன் ஃபைனல் வருவாருன்னு சொல்றீங்க?".. ADK-கிட்ட அசிம் முன் வெச்ச கேள்வி!!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Azeem speak bigil vijay dialogue about bigg boss finale

People looking for online information on Azeem, Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Freeze Task, Bigg Boss Tamil will find this news story useful.