தமிழில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், பெரிய அளவில் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.
Also Read | ஸ்வீட் எடுங்க 😍 தாய் மாமாவான சிம்பு.. தங்கை இலக்கியா பகிர்ந்த குட் நியூஸ்..
இந்த சீசனில் மொத்தம் 21 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்த நிலையில், அனைத்து எபிசோடுகளும் விறுவிறுப்பாகவும் நிறைந்த படி சென்றது.
மொத்தமுள்ள போட்டியாளர்களில் இருந்து அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர், Finale சுற்றுக்கு முன்னேற்றம் கொண்டிருந்தனர். இதில், ஷிவின் 3 ஆவது இடம் பிடித்திருந்தார். இதற்கடுத்து, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அசிம் டைட்டில் வின்னர் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இதனையடுத்து, அவரை ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் பாராட்டவும் செய்திருந்தனர். மேலும் அவருக்கு 50 லட்ச ரூபாயும், காரும் பரிசாக வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ள அசிம், முதல் முறையாக வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தனது ரசிகர்கள் மற்றும் தனக்கு ஆதரவளித்த அனைத்து தமிழ் மக்களுக்கும் தனது நன்றிகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பிக் பாஸ் வீட்டில் இருந்த போது Finale வில் தனக்கு வாக்களிப்பது பற்றி விளக்கம் கொடுத்து பேசிய அசிம், "கொரோனாவில் பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு நான் நிறைய உதவிகள் செய்து கொண்டிருக்கிறேன். அவர்களுக்கான கல்வி செலவை ஏற்கவேண்டும் என்பது என்னுடைய கனவு. ஆனால், நானும் சாதாரண பின்புலத்தில் இருந்து வந்தவன் தான். இந்த நிகழ்ச்சியில் நான் ஜெயித்தால் 25 லட்சம் அவர்களுக்கு சென்றடையுமாறு செய்யவிருக்கிறேன்" என உருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, தற்போது வெளியேறி உள்ள அசிம், இது பற்றி பேசுகையில், "அன்னைக்கு சொன்னது தான். நான் டைட்டில் வின் பண்ணா, அதுல வர 50 லட்சம் ரூபாயில் 25 லட்ச ரூபாய், கொரோனாவால் பெற்றோர்களை இழந்த மாணவ மாணவியருக்கு, அவர்களுக்கான பள்ளிக்கூட கல்விக்கு கொடுப்பேன். நான் இந்த 25 லட்ச ரூபாயை Open அக்கவுண்ட் தொடங்கி, யார் வேணா Approach பண்ணலாம். அவங்கள சரியா Verify பண்ணி, பணம் அளிக்கப்படும். அவங்கள பத்தி சோசியல் மீடியால பேர் மட்டும் மறைக்கப்பட்டு ஒரு பேஜில் போடப்படும் அப்படின்னு சொன்னேன்.
அது நான் மெய்ப்பட நிகழ்த்தி காட்டுவேன். டைட்டில் வின்னரான எனக்கு கொடுத்த இந்த 50 லட்சம் ரூபாயில், நேர் பாதி கொரோனாவால் பெற்றோர்களை இழந்து பாதிக்கப்பட்ட என்னுடைய தமிழ் சொந்தங்களுக்கும், தமிழ் உறவுகளுக்கும், ஜெயிக்க வைத்த தமிழ் இல்லங்களில் வாழும் என் அன்பு உள்ளங்களுக்கு நான் கொடுக்கணும்னு நினைக்கிறேன். என்னதான் சொல்லும், செயலும் ஒன்றானாலும் உலகின் தலை சிறந்த சொல் செயல்" என குறிப்பிட்ட அசிம், தன்னுடைய மக்களுக்காக, சமுதாயத்திற்காக திருப்பி இந்த உதவியை நிச்சயம் விரைவில் செய்து காட்டுவேன் என்றும் நெகழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
Also Read | ரீ ரிலீஸாகும் கமல்ஹாசன் நடித்த 'ஆளவந்தான்'.. உலகம் முழுவதும் இத்தனை தியேட்டர்ல ரிலீசா! மாஸ்