தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 70 நாட்களை கடந்த நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
மேலும் இந்த வாரம் நடைபெறும் டாஸ்க், மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. இதற்கு காரணம், பள்ளி மற்றும் கல்லூரியாக பிக்பாஸ் வீடு மாறி வருவது தான். இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஆரம்ப பள்ளியாக மாறி இருந்த பிக்பாஸ் வீடு, அதன் பின்னர் மேல்நிலைப் பள்ளியாக மாறி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, தற்போது 1980-ஸில் இருக்கும் கல்லூரியாகவும் பிக் பாஸ் வீடு செட் செய்யப்பட்டுள்ளது. "இந்திரன் சந்திரன் கலைக் கல்லூரி" என்ற பெயரில், பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் Vintage உடைகளை அணிந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக வலம் வருகின்றனர். ஒன் சைடு லவ் செய்யும் சைக்காலஜி ஆசிரியராக விக்ரமனும், நடன ஆசிரியர்களாக இரண்டு போட்டியாளர்களும் உள்ளனர். மற்ற 7 பேரும் மாணவர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் வலம் வர, கலகலப்பாக எபிசோடுகள் சென்று கொண்டிருக்கிறது.
முந்தைய டாஸ்க்குகள் நடைபெறும் சமயத்தில் நிறைய சண்டைகள் தான் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி கொண்டே இருக்கும். இதனால், எப்போதும் ரணகளமாக தான் போட்டியாளர்கள் இயங்கி கொண்டே வந்தனர். ஆனால், பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி டாஸ்க், அதிகம் எமோஷனல் ஆகவும், ஜாலியாகவும் தான் சென்று கொண்டிருக்கிறது.
இதற்கிடையில், தங்களின் குடும்பத்தினர் குறித்து மனம் உருகி போட்டியாளர் பேசிய விஷயமும், கடிதம் எழுதும் டாஸ்க்கில் தங்களின் நெருக்கமான நபர்களுக்காக மனதை நொறுக்கும் வகையில் எழுதி இருந்த விஷயமும் பார்வையாளர்களையும் கண் கலங்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அசிம் மற்றும் ADK ஆகியோர் பேசியது தொடர்பான விஷயம், அதிகம் வைரலாகி வருகிறது. ADK முன்பு சில கேள்விகளை அசிம் கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிகிறது. அப்போது கடைசியாக கேள்வி ஒன்றை முன் வைக்கும் அசிம், "இந்த பிக்பாஸ் வீட்டுக்குள்ள நீங்க வரும் போது நீங்க எதிர்பார்க்காத விஷயம், எப்பா, இப்படியும் மக்கள் இருக்காங்களா?. நாம வாழுற இதே ஊருல இப்படியும் இருக்காங்களான்னு நீங்க யோசிச்சது உண்டா?. ஒரு வேளை அப்படி யோசிச்சீங்கன்னா, அவங்க பேர் சொல்ல வேணாம். அந்த நபரை நீங்க புறக்கணிச்சு இருக்கீங்களா?. இல்ல பரவாயில்லன்னு சொல்லி பேசி இருக்கீங்களா?" என கேட்கிறார்.
இதற்கு பதில் சொல்லும் ADK, "புறக்கணிச்சு இருக்கேன், பேசியும் இருக்கேன். இப்பவும் பேசிட்டே இருக்கேன்" என சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறார். அதாவது மறைமுகமாக அசிமை தான் அவர் அப்படி குறிப்பிடுகிறார் என்பதும் தெரிய வருகிறது.