தமிழில் ஏகோபித்த வரவேற்புடன் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
Images are subject to © copyright to their respective owners
மொத்தம் 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூழலில் அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்களும் உருவாகினர். இதற்கு காரணம் அனைவருமே ஒவ்வொரு விஷயத்தில் தனித்துவம் வாய்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் அவர்கள் செயல்பட்டதால் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது. மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனின் டைட்டில் வின்னராக அசிம் தேர்வாகி இருந்தார். இரண்டாவது இடத்தை விக்ரமனும் மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்து இருந்தனர்.
இந்த நிலையில் Behindwoods பிரத்யேகமாக நடத்திய "மக்களுடன் அசிம்" என்ற நிகழ்ச்சியில் அசிம் கலந்து கொண்டார். அவருக்கு அரங்கத்தில் இருந்த மக்கள் அனைவரும் அசத்தலான வரவேற்பை வழங்கி இருந்தனர். இதில் தனலட்சுமியும் விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். பிக் பாஸ் வீட்டில் அவர்கள் இருவரும் அதிகம் சண்டை போட்டிருந்தாலும் இறுதியில் அண்ணன், தங்கை போல தான் மாறி இருந்தனர். அப்படி ஒரு சூழலில் மக்களுடன் அசிம் என்ற நிகழ்ச்சியிலும் தனலட்சுமி கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை பேசி இருந்தார்.
அப்போது, ஹாட் ஸ்டார் மூலம் வாக்களித்ததன் காரணமாகத்தான் சரியான ஓட்டு விகிதம் வரவில்லை என்ற கருத்துக்கு பதில் அளித்த அசிம், "15 வாரத்துல 14 வாரம் நாமினேஷன் இருந்துச்சு. அதுல ஆறுல இருந்து ஏழு வாரம் சொல்லப்பட்ட அந்த நபர்கள், நாமினேஷன்ல வந்தாங்க. ஓட்டு வாங்கி நாமினேஷன் ஆகும் போது என் மக்களுக்கு நன்றி, கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி, தமிழ் பெருங்குடி மக்களுக்கு நன்றின்னு சொல்லும் போது தெரியலையா அது ஹாட்ஸ்டார்ல போட்டதுன்னு.
ஏழு வாரம் நாமினேஷன்ல இருந்து Save ஆகும் பொழுது, என் மக்களுக்கும், தமிழ் பெருங்குடி மக்களுக்கும், கமல்ஹாசன் அவர்களுக்கும் நன்றின்னு சொல்லி, அதே 15 வது வாரம் வெற்றியை தழுவி தோல்வி பெற்று, அந்த வெற்றியை அசிம்க்கு வந்தா அந்த ஓட்டு சரியான முறையில் Hotstar ல போடலங்குறது, எப்படிப்பா இதெல்லாம். உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?. அந்த இடத்தில நான், தனலட்சுமி, மணிகண்டன், கதிர் இவங்க யாராவது ஜெயிச்சிருந்தா அந்த ஓட்டு விகிதம் சரியா வரலன்னு சொல்லி இருப்பாங்க.
இதே அவங்களுக்கு ஃபேவரைட்டான ஆள் வின் பண்ணி இருந்தா இல்ல அது சரியான ஓட்டுன்னு. நீங்க சொல்ல வர்றது என்னன்னா, உங்களுக்கு எந்த விஷயம் சாதகமா வருதோ அது மட்டும் உங்களுக்கு ஏற்புடையதா இருக்கும், எந்த விஷயம் உங்களுக்கு பாதகமா இருக்கோ அது ஏற்புடைய தன்மை இல்லாத வகையில் இருக்கும்ன்னு நீங்க சொன்னீங்கன்னா, அதுதான் உங்களோட சிந்தனை, அதுதான் உங்களோட புத்தி. இதுக்காக தான் மக்கள் உங்களுக்கு ஓட்டு போடலங்குறத நீங்க தெரிஞ்சுக்கணும்" என அசிம் தெரிவித்தார்.