பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.
Also Read | பாத்ரூமில் வழுக்கிய அசிம்?.. சத்தம் கேட்டு பதறியடிச்சு ஓடிய கதிரவன்.. என்னங்க நடந்துச்சு?
இதற்கு அடுத்தபடியாக, தற்போது பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.
அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர்.
அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ஏடிகேவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். விக்ரமன் மற்றும் கதிரவனின் பெற்றோர்கள், அசிமின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்துள்ளனர்.
மேலும் பிக் பாஸ் வீட்டில் வருகை தரும் போட்டியாளர்களின் குடும்பத்தினர், ஹவுஸ்மேட்ஸ் குறித்தும் நிறைய விஷயங்களை பேசி வருகின்றனர். தங்களின் பேவரைட் போட்டியாளர்கள் யார் என்பது குறித்தும், எப்படி அவர்கள் கேம் ஆடுகிறார்கள் என்பது பற்றியும் தங்களது கருத்துக்களை அவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.
இதனிடையே, விக்ரமனை பார்த்து அசிம் நண்பன் சொன்ன விஷயமும், அதற்கு அமுதவாணன் உள்ளிட்டோர் கொடுத்த ரியாக்ஷனும் அதிக வைரலாகி வருகிறது. அசிமை பார்ப்பதற்காக அவரது சகோதரர் மற்றும் நண்பர் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்திருந்தார். அவர்கள் மிகவும் ஜாலியாக அசிமிடம் பேசிக் கொண்டிருந்ததும் அதிக கவனம் பெற்றிருந்ததது.
இதற்கு மத்தியில், அசிம் நண்பர் விக்ரமனிடம் பேசிய விஷயமும், அதற்கு அமுதவாணன் கொடுத்த கவுண்டரும் அதிக வைரலாகி வருகிறது. பிக் பஸ் வீட்டில் வந்த அசிம் நண்பர், விக்ரமனிடம் கைகொடுத்து அவர் சிறப்பாக விளையாடுவதாக பாராட்டி இருந்தார். இதனைக் ஏடிகே, அமுதவாணன், மணிகண்டா மற்றும் மைனா நந்தினி உள்ளிட்டோர் கவனித்து கொண்டும் இருந்தனர்.
இதற்கடுத்து அசிம் நண்பனை அழைக்கும் அமுதவாணன், "எனக்கு நல்ல பேருன்னு சொன்னியா. மைனாக்கு நல்ல பேருன்னு சொன்னியா. மணிக்கு நல்ல பேருன்னு சொன்னியா. ஆனா அவருக்கு (விக்ரமன்) போயி நல்ல பேருன்னு சொல்லி கட்டிப் புடிச்சேன்" என ஜாலியாக விக்ரமனை தனியாக பாராட்டியதை அவர்கள் குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதே போல அசிம் தம்பி கூட விக்ரமன் சிறப்பாக விளையாடுவதையும் குறிப்பிட்டு அவரை பாராட்டவும் செய்கிறார்.
Also Read | "கோபத்துல பேசுனது, மனசுல வெச்சுக்காதீங்க".. அசிம் அப்டி சொன்னதும் விக்ரமன் அப்பாவின் பதில்!!