ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனா பங்கேற்றுள்ளார்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலியே வெளியேறினார். இதனைத் தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இதற்கு அடுத்த கட்டமாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு அடுத்த வாரத்தில் ஷெரினா, அதன் பின்னர் மகேஸ்வரி வெளியேறினர். கடைசியாக நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், 50வது நாளன்று ஞாயிற்று கிழமை எபிசோடில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான டாஸ்க்காக, பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் என்னும் டாஸ்க் தரப்பட்டுள்ளது. இதில் பழங்குடியின மக்களாக அசீம், ஷிவின், விக்ரமன், ஏடிகே, ராம், விஜே கதிரவன், மைனா ஆகியோர் முதல் நாள் இருந்தனர். ஏலியன்களாக தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, அமுதவாணன், ரச்சிதா, ஆயிஷா, மணிகண்டா ஆகியோர் இருந்தனர். இவர்களின் அணி அடுத்தடுத்த நாட்களில் இடம் மாறக்கூடும்.
இதில்தான், ‘போக பிஸ்ஸா’ என்னும் விநோதமான ஆட்டம் பிரபலமாகியுள்ளது. இந்த ஆட்டத்தின்படி பழங்குடி மக்களுக்கு தேவைப்படும் அதிசய பூ, ஏலியன்ஸ்களின் பகுதிலும், ஏலியன்ஸ்களுக்கு தேவைப்படும் அதிசயக் கல் பழங்குடிகளின் பகுதியிலும் இருக்கும். அந்த அதிசயக் கல் பழங்குடிகளின் உழைப்பில் தயாரிக்கப்படும். இதனால் ஒருவர் இன்னொருவரது ஏரியாவுக்குள் சென்று அவர்களுக்கு தேவையானதை எடுத்து வருவது இந்த டாஸ்கில் முக்கிய அம்சம்.
அப்படி போகும்போது அந்த போட்டியாளர் பிடிபட்டால், அவரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து எதிரணியினர் தொடாமல் பேசியும் ரியாக்ஷன் பண்ணியும் டார்ச்சர் செய்வார்கள். பதிலுக்கு அந்த பிடிபட்டவர் ரியாக்ட் செய்தால் தோல்வி என அர்த்தம். அப்படியானால் என்ன பண்ண வேண்டும்? மாட்டிக்கொள்ளும் அந்தக் கூட்டத்துடன் சேர்ந்துவிட வேண்டும். ஆனால் மன திடகாத்திரத்துடன் எதிரணியினரின் டார்ச்சருக்கு ரியாக்ட் செய்யாமல் பஸ்ஸர் அடிக்கும் வரை இருந்தால் அவர்களுக்கு, தேவைப்படும் பொருளுடன் வெற்றியுடன் வெளியே செல்லலாம். இறுதியில் எல்லாம் முடிந்த பின் யாரிடம் அதிக கல் இருக்கிறதோ, அவர்கள் ‘நாமினேஷன் ஃப்ரீ ஜோன்’ உட்பட சில பல சலுகைகள் தருவார்கள்.
வழக்கம் போலவே இந்த டாஸ்க்கிலும் அசீம் கோபப்படுவது, குரல் உயர்த்தி கத்துவது, டென்ஷன் ஆவது என்று தான் இருந்தார்.
அசீமை பொறுத்தவரை மற்றவர்கள் கோபப்பட்டு கத்தும் பொழுது ஓடி சமாதானப்படுத்தவும் அவர்களின் சண்டையை விலக்கி விடவும் செய்வார். ஆனால் தான் கோபப்பட்டு கத்தும் பொழுது டென்ஷன் அதிகமாக ஆகும் போது தன்னையே மறந்த நிலைக்கு சென்று விடுவார். இந்த பழங்குடி டாஸ்க்கில் அசீம் பழங்குடி அணியில் இருந்ததால் கார்டன் ஏரியாவில் இருந்தார்.
வழக்கமாக அசீமுக்கு, பதிலுக்கு பதில் சண்டையிடும் தனலட்சுமி இந்த முறை அசீம் பேசுவதை சட்டை பண்ணாமல் போய்விட்டார். இதனால் அசீம் கூடுதலாக டென்ஷன் ஆனார். முன்னதாக கதிரிடமும் இந்த விளையாட்டு குறித்த தன்னுடைய வியூகத்தை சொல்லும் பொழுது கதிரோ அனைவரின் டிஸ்கஷனையும் தான் ஏற்க முடியும், தனிமனிதரின் முடிவை ஏற்க முடியாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் விளையாட்டு முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார். ஆனால் அப்போதே பேச வேண்டும் என்று அசீம் கதிரவனை வலியுறுத்தியதால் அவர்களுக்குக்கும் சண்டை உருவானது. அதன் பிறகு கதிரவன் எழுந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் தான் சற்றே சாப்பிடாமல் இருந்த அசீம், கார்டன் ஏரியாவில் இருந்திருக்கிறார். வீட்டுக்குள் இருந்த ஏலியன்கள் அவ்வப்போது சாப்பிடுவது உண்டு. ஆனால் கார்டனில் இருக்கும் பழங்குடி அணியினர் உணவு நேரத்தில் மட்டுமே உணவு உண்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.
இப்படி சாப்பிடாமல் இருந்தது, அதிக டென்ஷன், கோபம், சக்தியின்மை உள்ளிட்டவற்றின் காரணமாக அசீம் திடீரென மயங்கி விட அவரை சக ஹவுஸ் மேட்ஸ் ஓடி வந்து தண்ணீர் தெளித்து தூக்கிக் கொண்டு செல்கின்றனர். அப்போது தான் அவருக்கு உயர் அழுத்தம் 190 வரை தென்படுவதாக சொல்கிறார்கள். இதைத் தொடர்ந்து அசீமுக்கு மெடிக்கல் ரூமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.