பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன், விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தினமும் நடக்கும் சண்டை சச்சரவுகள் மூலம் பலரது முகத்திரை கிழிக்கப்பட்டு வருகிறது. மேலும் விறுவிறுப்பை கூட்ட அடுத்தடுத்து வைர்ல்டு கார்டு போட்டியாளர்கள் இறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அடுத்ததும் ஒரு விஜய் டிவி பிரபலம் தான் நுழைய இருப்பதாக தகவல்கள் வைரலானது. அவரும் இதை ஒப்புக்கொண்டார்.
ஆனால் திடீரென அசீம் தான் பிக்பாஸில் பங்கேற்க வில்லை என்று அறிவித்தார். இதுபற்றி அவர் தற்போது ஒரு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும் பொழுது "ஒருவனின் காலில் விழுந்து தான் வாழ வேண்டும் என்றால், எழுந்து நின்று இறந்து போ. நான் விலகி நிற்பது என் நலத்திற்காக அல்ல, உன் நலத்திற்காக. என்னுடன் மோதும் முன் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள். ஏனென்றால் நான் அஞ்சுவதும் அடிபணிவதும் இறைவன் ஒருவனுக்கே. என் முன்னாடி நிற்பதற்கு தைரியம் வேண்டும் குழந்தாய்" என்று கூறியுள்ளார். ஆனால் அவர் யாரை பற்றி சொல்கிறார் என்பது நமக்கு தெளிவாக தெரியவில்லை.