பிக்பாஸ் சீசன் 6-ன் வெற்றியாளர் அசீம் தனது அனுபவம் குறித்து நமது சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "இந்த முறை அணுகுண்டு வெடிப்பு".. தளபதி 67 படம் குறித்து முதல்முறையாக ட்வீட் செய்த அனிருத்!
தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 6-ல் அசீம் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் எப்போதும் இறுதியில் இரண்டு போட்டியாளர்கள் மட்டுமே கிராண்ட் ஃபினாலே-விற்குள் நுழைவது வழக்கம். ஆனால் கடந்த சீசனில் முதன்முறையாக அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேரும் கிராண்ட் ஃபினாலே-விற்குள் நுழைந்தனர். இந்த மூவரில் வெற்றி பெறப் போவது யார் என ரசிகர்களிடையே சமூக வலைத் தளங்களில் பெரும் விவாதமே நடைபெற்று வந்த வேளையில் அசீம் தான் வெற்றியாளர் என அறிவித்தார் கமல்ஹாசன். இது அவரது ரசிகர்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
Image Credit : Vijay Television
இந்நிலையில் நமது சேனலுக்கு அசீம் சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார். அப்போது தனது பிக் பாஸ் அனுபவங்கள் மற்றும் பிக் பாஸ் வீட்டில் உள்ளே நடந்த சம்பவங்கள் குறித்து பல தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது தன்னுடைய கோபம் குறித்து பேசிய அசீம்," பிக் பாஸ் வீட்டுக்குள் முதன் முதலில் நான் சென்றபோது 20 பேருடன் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வெவ்வேறு மனிதர்களுடன் பழகும் போது ஏற்படும் ஒருவித சிரமத்தையும் நான் எதிர்கொண்டேன். வீட்டுக்குள் நான் கோபப்பட்டு பேசிய வார்த்தைகள் அனைத்தும் அந்த கணத்தில் எழுந்த கோபத்தின் வெளிப்பாடே தவிர நான் மனதளவில் யாரையும் காயப்படுத்த பேசவில்லை" என்றார்.
தொடர்ந்து எதிர்மறை கருத்துகள் குறித்து பேசிய அவர்,"நான் வெளியே வந்த பிறகு சோசியல் மீடியாவில் நிறைய நெகட்டிவிட்டி கருத்துகளை பார்க்கிறேன். என்னை உண்மையாக விரும்பியவர்களும் எனக்கு வாக்களித்தவர்களும் சரி, விக்ரமனுக்காக வாக்களித்தவர்களும் சரி யாரையும் தாக்கி பேசாதீர்கள். அது ஒரு நிகழ்ச்சி மட்டுமே. நாங்கள் கலந்து கொண்டோம். வெற்றி பெற்றோம்.வெளியே வந்து விட்டோம். நான் விக்ரமிடம் பேசும்போது நம்மிடயே உள்ள கருத்து வேறுபாடுகள் அனைத்தும் இந்த வீட்டுடன் முடிந்து விடும். வெளியே சென்று நாம் நம்முடைய நட்பை தொடர வேண்டும் என்று கூறினேன். சிலர் விக்ரமனை பூமர் என்று கூட சொல்கிறார்கள். அது தேவையில்லாதது. நானும் அவரும் அப்படிப்பட்டவர்கள் கிடையாது. ஒரு நிகழ்ச்சியில் ஏதோ ஒரு கோபத்தில் பேசிய வார்த்தைகளை வைத்துக்கொண்டு நாங்கள் என்னமோ எதிரிகள் போல சித்தரித்துக் கொள்ளாதீர்கள். தயவு செய்து யாரையும் தாக்கி பேசாதீர்கள்" என்றார்.
Also Read | "விக்ரமனுக்கும் எனக்கும் இதுல தான் சண்டை".. பிக்பாஸ் வின்னர் அசீம் EXCLUSIVE..!