தமிழில் சிறந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இதுவரை மொத்தம் ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளது. அந்த வகையில் இதன் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக முடிவுக்கு வந்திருந்தது.
Images are subject to © copyright to their respective owners
மொத்தம் 106 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியின் ஃபினாலேவிற்கு அசிம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் முன்னேறி இருந்தனர். மொத்தமுள்ள 21 போட்டியாளர்களில் இருந்து இந்த மூன்று பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருந்த சூழலில், ஆறாவது பிக் பாஸ் சீசனின் டைட்டில் வின்னராக அசிம் தேர்வாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.
இந்த நிலையில், Behindwoods -ன் "மக்களுடன் அசிம்" என்ற பிரத்யேக நிகழ்ச்சியில் அசிம் கலந்து கொண்டார். அதில் பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களையும் தன் மீதான விமர்சனங்களுக்கான விளக்கத்தையும் பகிர்ந்து கொண்டார். அந்த சமயத்தில் அசிம் மற்றும் விக்ரமன் இடையே முதல் இரண்டு வாரங்களில் நடந்த சண்டை தொடர்பான வீடியோ குறித்த மீம் ஒன்று காண்பிக்கப்பட்டது.
Images are subject to © copyright to their respective owners
இதனைப் பார்த்த பிறகு அது பற்றி பேசி இருந்த அசிம், "ஃபர்ஸ்ட் சம்பவம் இதுல தான் நடந்துச்சு. நீங்க எல்லாருமே முதல் வாரம் பார்த்திருந்தீங்கன்னா விக்ரமன் அவர்கள் வந்து என்னோட பெட்மேட் தான். முதல் வாரம் மட்டுமில்ல, 106 நாளும் அவரும், நானும் ஒண்ணா தான் பெட்மேட்ல இருந்தோம். முதல் வாரம் விக்ரமன் நண்பர், ஹேய் மச்சான், வாடா, போடான்னு தான் சொல்லுவாரு. எனக்கு என்னன்னா உள்ள போய் பழகுனாலும் நல்லா பழகிட்டாரு வாடா, போடா சொல்றாறேன்னு நானும் வாடா போடான்னு தான் சொல்லிட்டு இருந்தேன்.
இந்த ரேங்கிங் டாஸ்க் வரைக்கும் வாடா, போடான்னு சொல்லிட்டு இருந்த விக்ரமன், அந்த ரேங்கிங் டாஸ்க் நான் அவர்கூட பிரச்சனை பண்ணி சொன்னதுனால என்ன நினைச்சுட்டாருன்னா, அந்த சூழ்நிலையை வெச்சு என்ன வாடா, போடான்னு சொல்றேன்னு அவரு ஏசிட்டாரு. அவரு போன வாரம் என்ன சொன்னேன்ங்குறத மறந்துட்டாரு. மறந்து இரண்டாவது வாரத்துல இருந்து புடிச்சிட்டாரு, நீ எப்படி என்ன வாடா போடான்னு சொல்லலாம்ன்னு.
Images are subject to © copyright to their respective owners
முன்னாடி சொன்னதெல்லாம் மறந்து இந்த டாஸ்க்ல தான் அவரை வாடா, போடா சொன்னேன்னு நெனைச்சுட்டாரு. அந்த இரண்டாவது வாரத்துல ஆறாவது இடத்திற்கு அவர் தகுதி இல்லைன்னு தோணுச்சு. அதனால தான் நான் Open ஆ பேசினேன். நமக்கு மறச்சு வச்ச எல்லாம் பேச தெரியாது" என அசிம் விளக்கம் அளித்தார்.