www.garudavega.com

"பாசம் வைக்க, நேசம் வைக்க".. அசிம், கதிர் FRIENDSHIP.. லைவ் ஷோவால் மாறிய வாழ்க்கை.. "சூப்பர்ல"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 10 பேர் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ள நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

Azeem and kathiravan friendship by live show in channel

Also Read | “வேலை செய்றத தடுக்குறாங்க..” செல்லம்மா சீரியலை விட்டு விலகிய பாக்கியலட்சுமி ஜெனி!

இனிவரும் நாட்கள் ஒவ்வொன்றும் பிக்பாஸ் வீட்டில் தங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு மிக முக்கியமான ஒன்று என்பதால், அனைத்து போட்டியாளர்களும் தங்கள் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதே போல, ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது. பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.

Azeem and kathiravan friendship by live show in channel

அதே போல, சமீபத்தில் நடந்து முடிந்த ‘சொர்க்கம் – நரகம் – ஷார்ட்கட்’ டாஸ்க்கில் கூட நிறைய சண்டைகள் மற்றும் குழப்பங்கள் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் அரங்கேறி இருந்தது. இதனிடையே, பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வார எலிமினேஷனில் ஜனனியும் வெளியேறி இருந்தார். இறுதி போட்டி வரை முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜனனி பாதியில் வெளியேறி இருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டு பண்ணி இருந்தது.

Azeem and kathiravan friendship by live show in channel

இதற்கடுத்து மீதமுள்ள போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடி வருகின்றனர். மேலும், இந்த வாரம் பிக்பாஸ் வீடு ஆரம்பப் பள்ளியாக மாறி உள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக மாறி விளையாடி வருகின்றனர்.

இதற்கு மத்தியில், போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் நிறைய விஷயங்களை பேசி வருகின்றனர். அப்போது, கதிரவன் எப்படி தனது நண்பராக மாறினா என்பது பற்றி அசிம் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

Azeem and kathiravan friendship by live show in channel

"நான் ஆடிஷனுக்காக போயிருந்த போது கதிரவனோட லைவ் ஷோ அங்க போயிட்டு இருக்கு. ஒரு பையன் மீசை இல்லாம மொழுக்கு மொழுக்குன்னு நின்னு பேசிட்டு இருக்கான். அப்ப தான் நான் கதிரவனை ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட்டா பார்க்குறேன். அப்ப நான் ஆடிஷன் கொடுக்கறப்ப பேச்சு சரியா வரலைன்னு சொல்றாங்க. அதுக்கப்புறம் சான்ஸ் கிடைக்கலைன்னு பழைய சேனலுக்கு வந்தேன். திருப்பி ஒரு தடவை கதிர் இருந்த சேனலுக்கு போகும்போது என்கூட ஒரு 130 பேர் வரை இருந்தாங்க.

அதுல நான் ஒருத்தன் மட்டும் தான் செலக்ட் ஆகி வரேன். என்னோட ஃபர்ஸ்ட் லைவ் ஷோ கதிரவன் கூட தான். அங்கே இருந்து தான் எங்களோட ஃப்ரெண்ட்ஷிப் ஸ்டார்ட் ஆகுது. ஜாலியா லைஃப் போயிட்டு இருந்தது" என அசிம் தெரிவித்துள்ளார்.

Also Read | "என்னது? Bigg Boss அசிம், ரச்சிதா சேர்ந்து சீரியல்ல நடிச்சுருக்காங்களா?".. இது எப்ப?

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Azeem and kathiravan friendship by live show in channel

People looking for online information on Azeem, Azeem and kathiravan friendship, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Kathiravan, Vijay Television, Vijay tv will find this news story useful.