தமிழ் பிக் பாஸ் சீசன் 6 முடிவடைந்த நிலையில் இதன் போட்டியாளர்கள் அனைவரும் தற்போது வெளியில் எங்கே சென்றாலும் மக்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners
இதற்கு மிக முக்கிய காரணம், போட்டியாளர்களாக களமிறங்கி இருந்த 21 பேரும் மிகச் சிறப்பாக மக்கள் மத்தியில் பெயர் பெற்றது தான். ஒவ்வொரு போட்டியார்களும் ஒவ்வொரு தனித்திறனுடன் விளங்கியதால் அவர்கள் அனைவரும் பலரின் ஃபேவரைட் ஆகவும் மாறி இருந்தனர்.
இதன் காரணமாக தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து இத்தனை நாட்கள் ஆகியும் அவர்கள் எங்கு சென்றாலும் தொடர்ந்து மக்கள் அவர்களுக்கு வேற லெவலில் வரவேற்பையும் அளித்து வருகின்றனர்.
முன்னதாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலேவிற்கு அசிம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகிய மூன்று பேர் முன்னேறி இருந்தனர். இறுதியில் அசிம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட, இரண்டாவது இடத்தை விக்ரமனும் மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அசிம், சமீபத்தில் Behindwoods நடத்திய "மக்களுடன் அசிம்" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் தனலட்சுமி, மணிகண்டா மற்றும் அசல் கோலார் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசிமுடன் கலந்து கொண்ட சக போட்டியாளர்களும் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த பல்வேறு விஷயங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். அந்த சமயத்தில், தனது திரைப்படத்திற்கான வாய்ப்புகள் குறித்து முதல் முறையாக சில கருத்துக்களை அசிம் பேசி உள்ளார். "Behindwoods ல தான் இந்த விஷயம் நான் ஃபர்ஸ்ட் சொல்றேன்னு நினைக்கிறேன். நாங்க வெளிய வந்ததுக்கு அப்புறம், மாப்பிள்ளையும் (மணிகண்டா) நிறைய ஸ்கிரிப்ட் கேட்டு இருக்கான். நானும் நிறைய ஸ்கிரிப்ட் கேட்டுட்டு இருக்கேன்.
அதுல ரெண்டு, மூணு ஸ்கிரிப்ட் ரொம்ப பிடிச்சுது. கடவுள் புண்ணியத்துல எல்லாம் நல்லபடியா போச்சுன்னா அந்த ஸ்கிரிப்ட்ல என் நண்பன் மணி இருப்பான். அதே மாதிரி அந்த ஸ்கிரிப்ட்ல என் குட்டியோட (அசல் கோலார்) ஃப்யூச்சரும் அதுல இருக்கும், அவனோட ரெண்டு பாட்டும் அதுல இருக்கும். தெறிக்க விடுறோமான்னு ஒரு ஸ்கிரிப்ட் கேட்டு வச்சிருக்கோம். அதுக்கான Official Announcement வரும். இப்போதைக்கு என்னால இவ்வளவுதான் சொல்ல முடியும்" என அசிம் தெரிவித்தார்.