விஜய் டிவி மூலம் பிரபலமான பாடகி ஷிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அதில் அவர் செய்யும் சேட்டைகளும் குறும்புகளும் அவரை மக்களுக்கு மிகவும் பிடிக்க வைத்திருக்கிறது என்று சொல்லலாம். மக்களும் அவரை தன் வீட்டில் ஒருவராகவே பார்க்க தொடங்கிய நிலையில் விஜய் டிவியின் முக்கியமான கலைஞரான அசார், ஷிவாங்கி போலவே மிமிக்ரி செய்து அசத்தி ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார்.
பிரபலங்களின் குரல்கள் மட்டுமல்லாமல் பல அரிதான குரல்களை மிமிக்ரி செய்து பேசுவதில் வல்லவரான அசார், ஷிவாங்கியின் குரலில் பேசி ஒரு வீடியோவை பதிவிட்டு கொண்டிருக்கும் போதே அவரை ஷிவாங்கி அணுகி, இது என்ன மாதிரியா இருக்கு? என்று அவரை கேட்டு கலாய்த்துவிட்டு செல்கிறார்.
இதேபோல் ஷிவாங்கி குக் வித் கோமாளியில் பங்கேற்கும் நடிகர் அஸ்வினை அவருக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக வீடியோ எடுக்கிறார். அந்த வீடியோவும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஷிவாங்கியும் விஜய் டிவி நடிகர் புகழும் அண்ணன் தங்கையாக பழகுவதில் மிகவும் பிரபலமாகி வரும் நிலையில் அவர்கள் வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்துள்ளனர். ஷிவாங்கி சிவகார்த்திகேயனின் டான் படத்திலும், புகழ் சந்தானத்தின் ஒரு படத்திலும் நடிக்கிறார்கள்.
ALSO READ: "வாழ்க்கை நரகமா இருக்கு".. சுஷாந்தின் ‘MS தோனி’ படத்தின் இன்னொரு நடிகர் தற்கொலை!