தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் அரங்கேறி வருகிறது
பொம்மை டாஸ்க், அரசவை டாஸ்க், அருங்காட்சியகம் டாஸ்க், கோர்ட் டாஸ்க், பழங்குடி வெர்சஸ் ஏலியன் டாஸ்க் என அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களிடையே நிறைய வலுவான போட்டிகளும் அவ்வபோது சண்டை சச்சரவுகளும் நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்படுத்தி இருக்கின்றன.
முன்னதாக இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி மற்றும் வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனா நந்தினி பங்கேற்றனர்.
இவர்களுள் ஜிபி முத்து முதலிலேயே சில காரணங்களால், வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி, பின்னர் அசல், ஷெரீனா, விஜே மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்பட்டனர். அண்மையில் குயின்ஸியும் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஐகானிக் கேரக்டர்களை ஏற்று அந்த கேரக்டர் போலவே நடை உடை பாவனை ஒப்பனை உள்ளிட்டவற்றை ஏற்று டாஸ்க் செய்து வருகின்றனர். இதில் தான் பலவந்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணாக ஷிவின் நடிக்க, பலவந்தம் செய்யும் ஆணாக கதிரவனை நடிக்க வைக்கலாம் என்று ஆயிஷா கூறுகிறார். ஆனால் ஷிவினோ, கதிரவனுக்கு ஒரு கரியர் இருக்கிறது, அவருக்கு இது நெகட்டிவாக அமையலாம் என்று மறுக்கிறார்.
அப்போது இது வெறும் நாடகம் தானே என்று ஷிவினை ஆயிஷா சமாதானப்படுத்த முனைகிறார். ஆனால் ஷிவின் மீண்டும் மீண்டும் மறுக்க, அப்போது ஆயிஷா, “இங்க பார். நான் சரளமாக கெட்ட வார்த்தை பேசுவேன். என்னை கெட்ட வார்த்தை பேச வெச்சிராத. இது வெறும் நாடகம் தான். நான் சொல்வதைக் கேள். அவரும் மீடியாவில் தான் இருந்திருக்கிறார். அவருக்கும் இதெல்லாம் புரியாமல் இல்லை.” என்று சமாதானப்படுத்துகிறார்.
இதனிடையே அங்கு ஏடிகே வர ஷிவின் பேச்சை நிறுத்திக் கொள்கிறார். ஆனால் ஆயிஷாவோ, “கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் கேமரா வழியே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு யாரும் பார்க்கவில்லை” என்று ஜாலியாக கிண்டல் அடிக்கிறார்.