ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இப்படி பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் பிக்பாஸில், ஜனனி, ஆயிஷா குறித்து பேசும்போது, “வீட்டுக்கு வந்த டைம்ல, கிச்சன்ல ஆயிஷா பாத்திரம் கழுவிட்டு இருந்தாங்க. அப்போ நான் அவங்க கிட்ட போய், கொடுங்க நான் கழுவித் தாரேன் என சொன்னேன். ஆனா அப்போ அவங்க டக்குனு வெச்சுட்டு போயிட்டாங்க. அது ஒருமாதிரி இருந்த்து” என்று குறிப்பிட்டார்.
இதை கேட்ட ஆயிஷா, “இதற்கு நான் விளக்கம் தரேன்” என சொல்லி, “அவ வந்ததும், நான் மட்டுமே பாத்திரம் கழுவிட்டு இருந்துட்டு, கொஞ்சம் ஓவர் பெர்ஃபார்மென்ஸ் பண்றதா அவ நினைச்சுட கூடாதுனு, பாத்திரத்த டக்குனு வெச்சுட்டு போனேன்” என விளக்கம் அளிக்க, அதன் பிறகு தொடர்ந்த ஜனனி, “அதுதான் நீங்கள் செய்தது அப்படி ஃபீல் ஆச்சு, அதான் சொன்னேன்” என கூற மீண்டும் ஆயிஷா, “அதுதான் க்ளியர் பண்ணிட்டேனே. அப்புறமும் ஏன் புரியாம பேசுறாங்க..” என சொல்லி எல்லாருக்கும் மீண்டும் ஒருமுறை ஆயிஷா விளக்க முற்பட்டார்.
ஆனால் அப்போது அனைவரும் அது தேவையில்லை, மீறி விளக்க வேண்டும் என்றால் ஜனனிக்கு மட்டும் விளக்கினால் போதும் என கூற, ஆயிஷாவோ, “நான் என் தரப்பில் இருந்து அனைவருக்கும் ஒருமுறை சொல்லிடுறேனே?” என கத்த, விஜே மகேஸ்வரியோ “ஒருவர் செய்யும் தவறில் அனைவரையும் சேர்த்துக்கொண்டு அனைவருக்கும் அட்வைஸோ விளக்கமோ கொடுக்க தேவையில்லை” என கூறிவிட்டார். அப்போது டென்ஷன் ஆகும் ஆயிஷா, “ஐம் சாரி நான் எதுவும் பேசல.” என வேகமாக கத்துகிறார்.
பின்னர், தனியே சென்று ஜனனியிடம், “உனக்கு புரியுதா?” நான் சொன்னது என மீண்டும் ஆயிஷா கேட்க, விளங்கிவிட்டது என சொல்லும் ஜனனி மீண்டும் ஆயிஷாவுக்கு தன்னுடைய ஃபீலிங்கை சொல்வதுடன், “விளங்காததை விளங்கிக் கொண்ட மாதிரி நடிக்கவும் முடியாது என்னால்” என்று சொல்கிறார். அப்போது “புரியுது என்று சொல்லிவிட்டு ஏன் இந்த பேச்சு.. புரிஞ்சுதா இல்லையானு முதலில் தெளிவா சொல்” என ஆயிஷா கேட்க, நண்பர்கள் சிலர் திரும்பவும் ஆயிஷாவுக்கு ஜனனிக்கு புரியவில்லைம், அவளால்.. நடிக்க முடியாது” என கூறுகின்றனர்.
அப்போது, ஜனனியோ, “எனக்கு விளங்கவும் இல்ல.. விளங்காம இருக்கவும் இல்ல, ஆனால் விளங்கிக் கொண்டதாக என்னால் நடிக்க முடியாது. ஆயிஷா சொன்னதை நான் விளங்கிக் கொண்டேன்” என கூற, அப்போது ஜனனி பதிலால் டென்ஷனான ஆயிஷா, “இங்க பார்.. உன் முகத்த பார்த்து என்னால கண்டுபிடிக்க முடியல. புரிஞ்சுதா..? புரியலனா புரியலனு சொல்லு, புரிஞ்சா புரிஞ்சுதுனு சொல்லு” என மீண்டும் சொல்ல, அப்போது நண்பர்களோ, “அதுதான் ஜனனி விளங்குதுனு சொல்றாளே.. அப்படினா புரிஞ்சுதுனு அர்த்தம்!” என சொல்லி ஆயிஷாவை சமாதானப் படுத்துகின்றனர்.