ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதில் சத்யா சீரியல் நாயகி ஆயிஷா பங்கேற்றிருக்கிறார். சத்யா சீரியலில் துடுப்பான சென்னை பெண்ணாக வலம் வந்த ஆயிஷா, தனக்கே உரிய துணிச்சலான கேரக்டரை வெளிப்படுத்தி இருப்பார். அந்த கேரக்டருக்கு சற்றும் குறைவில்லாததுதான் அவருடைய எதார்த்தமான இயல்பும் என்பது தற்போது பிக்பாஸில் தெரிய வந்திருக்கிறது. எதுவாக இருந்தாலும் மனதில் பட்டதை பேசும் ஆயிஷா தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு அறிவியலை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
அதன்படி சக ஹவுஸ்மேஸ்ட்ஸ்களிடம் தன்னுடைய இந்த அறிவியலை ஆயிஷா கூ, பலரும் நம்பவில்லை என்பதால் ஹவுஸ் மேட்ஸ்களில் ஒருவரை அமர வைத்து, இன்னும் சக ஹவுஸ்மேட்ஸ்களை சுற்றி நிற்க வைத்து, உட்கார்ந்திருக்கும் ஹவுஸ் மேட்டின் தலைக்கு மேல் அனைவரின் கைகளையும் ஒன்றாக வைத்து, உட்கார்ந்திருப்பவரின் ஆற்றலை ஈர்ப்பியல் தத்துவப்படி ஈர்க்கிறார்.
இதனால் உட்கார்ந்திருப்பவர் எடை எளிதாவதாக உணர்கிறார்கள். பின்னர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, கீழே அமர்ந்திருப்பவரை தங்களுடைய ஒரு கையை லேசாக சப்போர்ட் கொடுத்து மிக எளிதாக தூக்கி விடுகின்றனர். இது எப்படி சாத்தியம் என்று பலரும் கேட்க, “எல்லோருமே என்னை ஜோக்கர் ஆகவே பார்க்கிறீர்கள்.. இது சயின்ஸ்” என்று ஆயிஷா கூறுகிறார்.
அடடே.. ஆயிஷாவுக்குள் இப்படி ஒரு அறிவியல் திறமை இருக்கிறதா என்று ஹவுஸ்மேட்ஸ்களும் பார்வையாளர்களும் ஆச்சரியத்தில் உறைந்திருக்கின்றனர்.