Sanjeevan M Logo Top
www.garudavega.com

"GP முத்து -வ..".. தனலட்சுமிக்கு STRATEGY சொல்லிக் கொடுத்த ஆயிஷா..? நள்ளிரவில் பரபர உரையாடல்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு தினமும் ஏராளமான சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களாக சென்று கொண்டிருக்கிறது.

ayesha about gp muthu and game strategy to dhanalakshmi

விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை என்பதால், இதற்கு முந்தைய சீசன்களை போலவே இந்த முறையும் நல்ல வரவேற்பை பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்று வருகிறது.

மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இதனால் தொடர்ந்து பிக்பாஸ் குறித்த விஷயங்கள், இணையத்தில் எப்போதுமே ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. ஆரம்பத்தில் கலகலப்பாக ஆரம்பித்த பிக்பாஸ் 6 ஆவது சீசன், அடுத்தடுத்து டாஸ்க்குகள் மற்றும் அணியாக பிரிந்த பிறகு, ஏகப்பட்ட பிரச்சனைகள் மற்றும் விவாதங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி வருகிறது.

இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக் கொள்கிறது. சமீபத்தில், தனலட்சுமி மற்றும் ஜிபி முத்து ஆகியோர் இடையே நடந்த வாக்குவாதம் பெரிய அளவில் பரபரப்பை கிளப்பி இருந்தது. ஜிபி முத்து நடிக்கிறார் என்றும் தனலட்சுமி குறிப்பிட, இதனால் கண்ணீர் விட்டு கலங்கவும் செய்திருந்தார் ஜிபி முத்து.

ayesha about gp muthu and game strategy to dhanalakshmi

இதனைத் தொடர்ந்து, பாத்திரம் கழுவும் அணியில் இருக்கும் ஜிபி முத்து, மற்ற அணியினருக்கும் உதவி செய்வதாக அதே அணியில் இருக்கும் ஆயிஷா மற்றும் தனலட்சுமி ஆகியோர் குறிப்பிட்டிருந்தனர். இதற்கு பதில் சொன்ன ஜிபி முத்து, எனது அணியில் என்னுடைய வேலையை நான் முடித்து விட்டு அடுத்தவருக்கு உதவி செய்வேன் என்றும், அது என்னுடைய விருப்பம் என்றும் உறுதியாக கூறுகிறார்.

ayesha about gp muthu and game strategy to dhanalakshmi

அப்படி ஒரு சூழ்நிலையில், தனலட்சுமியிடம் ஆயிஷா சொன்ன விஷயம், தற்போது பிக்பாஸ் வீட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

நள்ளிரவு நேரத்தில் தனலட்சுமியிடம் பேசும் ஆயிஷா, இந்த வீட்டில் ஜிபி முத்து உள்ளிட்ட யாராக இருந்தாலும் அவர்கள் எல்லாம் அமைதியாக இருந்து விட்டு எப்போது பேச வேண்டுமோ அப்போது சரியாக பேசிக் கொள்வார்கள் என குறிப்பிடுகிறார்.

ayesha about gp muthu and game strategy to dhanalakshmi

அதே போல, ஜிபி முத்துவிடம் பெரிய அளவில் எதுவும் ரியாக்ட் செய்யாமல், அவரை திட்டாமல் சரியான நேரத்தில் அவர் செய்வது பிடிக்கவில்லை என கூறி நாமினேட் செய்து விடு என்றும் நமது இடத்தை எப்படி தக்க வைத்துக்கொள்கிறோம் என்பது தான் இந்த விளையாட்டு என்றும் ஆயிஷா அறிவுறுத்துகிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ayesha about gp muthu and game strategy to dhanalakshmi

People looking for online information on Ayesha, BB6 Tamil, BiggBoss6 Tamil, Dhanalakshmi, GP MUTHU will find this news story useful.