www.garudavega.com

BIGGBOSS6 TAMIL : "என்ன கெட்டப் அண்ணா இது.. எனக்கு பிடிக்கல".. கதிரவனிடம் க்யூட்டாக அடம்பிடித்த ஆயிஷா 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் கண்ணாடி அணியாமல் இருந்த கதிரவனிடம் தனக்கு இந்த கெட்டப் பிடிக்கவில்லை என கிண்டலாக பேசியிருக்கிறார் ஆயிஷா.

Ayeesha conversation with kathiravan over his new look

Also Read | விஜய் சேதுபதி & விஷ்ணு விஷால் நடிக்கும் "இடம் பொருள் ஏவல்".. ரிலீஸ் எப்போ? செம அப்டேட்

சில தினங்களுக்கு முன்னர் கோலாகலமாக துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 தினந்தோறும் நடைபெறும் பல்வேறு விதமான வேடிக்கைகள், கிண்டல் நிறைந்த விவாதங்கள், டாஸ்க்குகள் என களைகட்டத் துவங்கியுள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே இந்த சீஸனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

Ayeesha conversation with kathiravan over his new look

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Ayeesha conversation with kathiravan over his new look

கேப்டனை தேர்வு செய்யும் டாஸ்க்கில் GP முத்து வெற்றிபெற்று பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதிரடி டாஸ்க்குகள், கிண்டலான உரையாடல்கள் என பிக்பாஸ் வீடு விறுவிறுப்பு நிறைந்ததாக மாறியுள்ளது. வீட்டுக்குள் எப்போதும் கண்ணாடியுடனேயே வலம்வரும் கதிரவன், கண்ணாடி அணியாமல் கிச்சனுக்குள் நுழைகிறார்.

Ayeesha conversation with kathiravan over his new look

அங்கே இருந்த ஆயிஷா மற்றும் வெங்கட் ஆகியோர் கதிரவனை பார்க்கின்றனர். அப்போது ஆயிஷா கதிரவனை பார்த்து,"இன்னிக்கு ரொம்ப சீரியஸா தெரியுறாரு" எனச் சொல்ல, "கண்ணாடி போடல அதான்" என்கிறார் கதிரவன். இதனையடுத்து ஆயிஷா,"செட் ஆகல, எனக்கு இந்த கேரக்டர் பிடிக்கல" என சிரித்துக்கொண்டே சொல்கிறார். பதிலுக்கு புன்னகைத்தபடி "உனக்கு கண்ணாடிக்காரன் தான் வேணுமா?" என கதிரவன் கேட்க ஆமாம் என்கிறார் ஆயிஷா. அதைத் தொடர்ந்து, சாப்பிட செல்லும் கதிரவன், ஆயிஷாவை பார்த்து "சாப்பிட்டியா?" எனக் கேட்டுவிட்டு செல்கிறார்.

 

Also Read | "கல்யாணம் ஆகலையா?.. நடக்கட்டும் அப்புறம் பாருங்க".. விக்ரமனுக்கு GP முத்து கொடுத்த அட்வைஸ்.!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ayeesha conversation with kathiravan over his new look

People looking for online information on Ayesha, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Kathiravan, Vijay Television will find this news story useful.