கேஜிஎஃப் 2 படம் வெளியாகி இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
Also Read | ராம்கோபால் வர்மாவின் அடுத்த சம்பவம் ’தகனம்’ …. விஜய் பட நடிகையின் கவனம் ஈர்க்கும் தொடர்…
கேஜிஎஃப் கலைஞர்கள்…
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியுள்ள 'கே ஜி எஃப் 2' படத்தில் கதையின் நாயகனாக ராக் ஸ்டார் யஷ் நடித்திருக்கிறார். இவருடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார். உஜ்வல் குல்கர்னி இந்த படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
பாகுபலி, RRR வரிசையில் கேஜிஎஃப் 2…
இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, இந்திய அளவில் வசூலை வாரி குவித்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், நேற்று ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக 10000 திரைகளில் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. கேஜிஎஃப் கன்னடத்தில் உருவான படமாக இருந்தாலும் ஒவ்வொரு மொழியிலும் ரசிகர்கள் அதை தங்கள் மொழிப் படமாகவே பார்க்கிறார்கள். ராஜமௌலியின் பாகுபலி 2 மற்றும் RRR ஆகிய படங்களுக்கு இணையாக இந்த திரைப்படம் பேன் இந்தியா ரிலீஸாக வெளியாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் மட்டும் 134.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
திரையுலகினரையே மிரட்டிய ராக்கி பாய்…
நேற்று படம் வெளியானது முதல் ஒட்டுமொத்தமாக பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல திரையுலகைச் சேர்ந்தவர்களும் படத்தைப் பார்த்து பாராட்டி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சிவகார்த்திகேயனின் அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் தன்னுடைய கருத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “KGF2 ஆரம்பம் முதல் இறுதி வரை டெம்போ குறையாத திரைக்கதை. ஆக்சன் படம் எடுப்பதற்கு வகுப்பெடுத்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல். சண்டைப்பயிற்சியாளர்கள் அன்பறிவு மாஸ்டர்ஸ் இருவரும் அதகளம் செய்திருக்கிறார்கள். இன்னொரு நேசனல் அவார்ட் கன்பர்ம். கன்னட சினிமாவிலிருந்து ஒரு சர்வதேசதரத்திலான படம். பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டிய படைப்பு” எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிகரிக்கும் திரை எண்ணிக்கை…
நேற்று கே ஜி எஃப் 2 தமிழகத்தில் இந்த படம் 350 திரைகளில் வெளியானது. ஆனால் அதன் பின்னர் கிடைத்து வரும் ஏகோபித்த வரவேற்பை அடுத்து தற்போது கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் திரைகள் ஒதுக்கப்படுவதை தமிழகத்தில் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு அறிவித்துள்ளார்.
Also Read | “பெத்தவுகளுக்குக் கூட அடிக்க உரிமையில்ல… ஆனா போலீசுக்கு…” நடிகர் சூரியின் சல்யூட்!