அவதார் 2 படத்தின் டிரைலர் வரும் மே மாதம் 6 ஆம் தேதி டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தோடு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிவாசல் வரை .. நாவல் to சினிமா.. புது ரூட்டில் உருவான தமிழ் திரைப்படங்கள்..! ஒரு Tribute
ஜேம்ஸ் கேமரூனின் அவதார்
கடந்த 2009 ஆம் ஆண்டு ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் அவதாஎ. இந்த படம் சுமார் 285 கோடி அமெரிக்க டாலரை வசூலித்து உலகில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்தது. இதற்கு முன்னர் கேமரூன் இயக்கிய டைட்டானிக் படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது. இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து 2016 ஆம் ஆண்டு அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தை படத்தை 5 பாகங்கள் கொண்ட தொகுப்பாக எடுக்க போவதாகவும் ஒவ்வொன்றும் இரண்டு வருட இடைவெளியில் ரிலிஸாகும் எனவும் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார். இந்த படத்தில் கேட் வின்ஸ்லெட், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், வின் டீசல், ஜோ சல்தானா மற்றும் சாம் வொர்திங்டன் ஆகியோர் நடிக்கின்றனர்.
அவதார் சாதனையை முறியடித்த அவெஞ்சர்ஸ்
அவதார் படம்தான் உலகில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்திருந்தது.அதை சமீபத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் திரைப்படம் முறியடித்தது. இந்நிலையில் அவதார் இரண்டாம் பாகத்துக்காக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் 2020 ஆம் வருடத்தில் அவதார் 2 படப்பிடிப்பு முழுவதும் முடிந்ததாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார். மேலும், 2022ம் ஆண்டு படம் வெளியாகும் எனவும் அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.
அவதார் 2 ரிலீஸ்…
இதையடுத்து இப்போது படத்தின் டிரைலர் ரிலீஸ் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வரும் மே 6 அன்று வெளியாகவுள்ள டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்தோடு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த செய்தி உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. மேலும் அவதார் 2 திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறைய முன்னிட்டு இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அவதாருக்குப் பிறகு…
அவதாருக்குப் பிறகு முழுக்க முழுக்க அவதார் 2 திரைப்படத்திலேயே கவனம் செலுத்தி வருகிறார் ஜேம்ஸ் கேமரான். இடையில் "சீக்ரெட்ஸ் ஆஃப் தி வேல்ஸ்" என்று அழைக்கப்படும் ஒரு தேசிய புவியியல் ஆவணத் திரைப்படம் ஒன்றை தயாரித்திருந்தார். இந்த ஆவனப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
நடிகர் சங்க தேர்தல் வெற்றி பெற்ற பாண்டவர் அணி… முதலில் சந்தித்தது யாரை தெரியுமா?