Fakir Others Banner USA

‘என்னோட அண்ணா.. என்னோட தளபதி’ - விஜய்க்கு அட்லியின் பர்த்டே கிஃப்ட் என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மெர்சல்’ இயக்குநர் அட்லி, விஜய்க்கு பிறந்தநாள் பரிசு அளித்துள்ளார்.

Atlee's special gift Bigil to Thalapathy vijay for his Birthday

‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு ‘பிகில்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தி விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், தளபதி விஜய்யின் 46வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் பரிசாக இயக்குநர் அட்லி ‘தளபதி 63’ படத்தின் தலைப்பான ‘பிகில்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இது குறித்த அட்லியின் ட்வீட்டில், ‘என்னோட அண்ணா.. என்னோட தளபதி.. விஜய் அண்ணாக்கு என்னோட பர்த்டே கிஃப்ட் ‘பிகில்’’ என ட்வீட் செய்துள்ளார்.

மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் அப்பா-மகன் என இரட்டி வேடங்களில் நடிகர் விஜய் நடிக்கிறார். இதில் மகன் விஜய் பெயர் பிகில் என தெரிகிறது. இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் இன்று (ஜூன்.22) நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Atlee's special gift Bigil to Thalapathy vijay for his Birthday

People looking for online information on AGS Entertainment, Atlee, Bigil, Nayanthara, Vijay will find this news story useful.