நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அஸ்தி இன்று (ஜூன் 18) கரைக்கப்பட்டது. அவரது சொந்த ஊர் பாட்னாவில் இன்று அவரது இறுதி அஸ்தியை குடும்பத்தினர் கங்கை நீரில் கரைத்தனர் இச்செய்தியை ஏ.என்.ஐ ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை, குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடன் வியாழக்கிழமை பிற்பகல் பாட்னாவின் என்ஐடி காட்டில் நடிகரின் இறுதி சடங்குகளை செய்தனர்.
கை போ சே, எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி, சிச்சோர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது மும்பை வீட்டில் தற்கொலை செய்து இறந்தார். அவரது மரணத்துக்குக் காரணம் தற்கொலைதான் என்று போலீஸார் கூறுகின்றனர். தொழில்முறை போட்டி காரணமாக அவர் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார் என்ற குற்றச்சாட்டுகளையும் போலீஸார் விசாரிக்கவிருக்கின்றனர். அண்மையில் அவர் கையெழுத்திட்ட ஏழு படங்களில் ஆறு படங்களை அவர் நீக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது,
சுஷாந்த் சிங்கின் மரணம் திரை உலகையும், தொலைக்காட்சி உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்ப உறுப்பினர்கள் அவரது இறுதி சடங்குகளை செய்ய மும்பைக்கு வந்தனர். மும்பையின் வைல் பார்லேவில் உள்ள பவன் ஹான்ஸ் தகன கூடத்தில் நடைபெற்ற சுஷாந்தின் இறுதிச் சடங்கில், சிச்சோரில் அவருடன் இணைந்து நடித்த ஷ்ரத்தா கபூர் மற்றும் வருண் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். கை போ சே படத்தில்ல் சுஷாந்துடன் பணிபுரிந்த ராஜ்கு,மார் ராவ், கை போ சே படத்தில் சுஷாந்தை இயக்கிய அபிஷேக் கபூர் மற்றும் கேதார்நாத்; விவேக் ஓபராய், ரன்வீர் ஷோரே மற்றும் பலர் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நெருங்கிய நண்பர் ரியா சக்ரவர்த்தி இறுதி சடங்கிற்கு முன்னதாக மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அவர் சுஷாந்த் சிங்கை காதலித்து வந்தார் என்று கூறப்படுகிறது. அவரை காதலித்து பின்னர் பிரிந்துவிட்ட நடிகை அங்கிதா லோகண்டே, சுஷாந்தின் இறுதிச் சடங்கிற்கு ஒரு நாள் கழித்து அவரது மும்பை இல்லத்தில் குடும்பத்தினரை சந்தித்தார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் கடைசியாக நெட்ஃபிக்ஸ் திரைப்படமான டிரைவில் நடித்தார், அதற்கு முன்னால் அவர் சிச்சோர் மற்றும் சஞ்சிரியாவிலும் நடித்தார். சுஷாந்த் சிங்கின் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் தில் பெச்சாரா, இது கொரோனா வைரஸ் லாக்டவுனால் ஒத்திவைக்கப்பட்டது. சுஷாந்தின் குடும்பத்தினர் ஒரு அறிக்கையில், "சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கையையும் படைப்புகளையும்" கொண்டாடுமாறு ரசிகர்களைக் கேட்டுக் கொண்டனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்