உதவி இயக்குநர்கள் எப்போதும் சினிமாவில் முக்கியமானவர்கள். ஒரு திரைப்படம் உருவாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் முதன்மையான 2 காரணங்கள் என்றால், முக்கியமான மூன்றாவது முழுமுதற்காரணம் உதவி இயக்குநர்கள்.
Also Read | கார்த்தி நடிக்கும் 'விருமன்' படத்தின் வெளியான புதிய ரிலீஸ் தேதி! முழு தகவல்
எந்த எதிர்பார்ப்புமின்றி, திரைப்படம் நன்றாக வந்துவிட வேண்டும், திரைப்பட பணிகள் கெட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக பல கஷ்டங்களை மறைத்து, சங்கடங்களையும் சிறு அவமானங்களையும் புறந்தள்ளிவிட்டு, மீண்டும் அடுத்த நாள் அதிகாலை ஷூட்டிங்கிற்காக நள்ளிரவே பணிபுரியத் தொடங்கும் நட்சத்திரவாசிகள் அவர்கள். அப்பேற்பட்ட உதவி இயக்குநர் ஒருவரின் உருகவைக்கும் செயல் குறித்து இயக்குநர் ஒருவர் படவிழாவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ‘8 தோட்டாக்கள்’ என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் அதர்வா - நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் 'குருதி ஆட்டம்' படத்தை இவர் இயக்கியுள்ளார்.
ராதிகா சரத்குமார் காந்திமதி எனும் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இந்த திரைப்படம் வரும் ஆகஸ்டு 5-ஆம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட உதவி இயக்குநர் ஒருவர், படப்பணிகள் பாதியில் நின்றுவிட்டதாக சொல்லி ஸ்விகி டெலிவரி பாய் ஆகிவிட்டதாக குறிப்பிட்டுள்ள விஷயம் உருக வைத்துள்ளது.
இதுபற்றி அவர் கூறும்போது, “நான் எப்போதும் நம்மளால யாரும் கஷ்டப்படக் கூடாது என்று வேறு படத்தில் சென்று வேலை பாருங்கள் என படப்பணிகள் தாமதம் ஆகும்போது உதவி இயக்குநர்களுடன் சொல்வேன். ஆனால் குரு எனும் உதவி இயக்குநரை நான் ஒரு நாள் பார்த்தேன், ஸ்விகி ஓட்டிக்கிட்டு இருந்தான். நீங்க எப்ப படம் ஆரம்பிக்கிறீங்களோ வந்துடுறேன் என்றான்” என்று குறிப்பிட்டு கண் கலங்கியுள்ளார்.
ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் தயாரிப்பில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி 'குருதி ஆட்டம்' திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\
Also Read | உதயநிதி வெளியிடும் அருள்நிதியின் Diary படம்.. வெளியான செம ட்ரெய்லர்.!