நடிகை அசின் முன்னணி நடிகர்களுடன் தமிழ் முதலான பல மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர்.
தமிழின் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களின் மாஸ் மற்றும் வெற்றிபெற்ற திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களிடையே நீங்காத இடம் பிடித்து நடிப்புத்துறையில் கலக்கிய முன்னணி நடிகை அசின்.
ஜெயம் ரவி நடித்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் கேரள நாயகி கதாபாத்திரமாக அறிமுகமாகிய அசின் அந்த படத்தில் ஜெயம் ரவியிடம் பேசும் ‘அய்யடா..’ எனும் வசனம் அப்போது பிரபலமாகியது. தொடர்ந்து கஜினி, சிவகாசி, போக்கிரி, தசாவதாரம் என பெரும் ஹீரோக்களின் வெற்றிப்படங்களில் அசின் நடித்தார்.
இதனைத் தொடர்ந்து அப்படியே பாலிவுட்டில் தடம் பதித்த அசின், பின்னர் மைக்ரோமேக்ஸ் துணை நிறுவனரான ராகுல் சர்மாவை காதலித்து கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு தற்போது மூன்று வயதில் அரின் ரயின் என்கிற பெண் குழந்தை இருக்கிறார். இந்நிலையில் தான் நடிகை அசின் மகளின் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகிறது. அசினின் மகள் தற்போது கதக் நடனம் கற்றுக்கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை தமது சமூக வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அசின், தமது 3 வயது குழந்தையின் வார இறுதி கதக் பயிற்சி என குறிப்பிட்டுள்ளார்.
இதைக் காணும் பலரும் இப்போதுதான் அசினுக்கு திருமணம் ஆனது போல இருக்கிறது, ஆனால் அதற்குள் அசின் மகள் நன்றாகவே வளர்ந்துவிட்டாரே என்று இணயத்தில் இந்த புகைப்படத்துக்கு சிலர் கருத்து தெரிவிப்பதுடன், சில ரசிகர்கள் மகள் தான் வளர்ந்துவிட்டாரே மீண்டும் அசின் நடிக்கலாமே என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ: "இந்த மனுஷன் வேற லெவல்!!".. வைரல் ஆகும் விக்ரமின் கோப்ரா பட 'புது' கெட்டப்!