இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியை 117 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வென்றது. இதன் மூலம் 1-1 என்கிற கணக்கில் தொடரை இந்தியா சமன் செய்தது.
இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 29-வது முறையாக ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தி இந்த சாதனையை படைத்திருக்கிறார். அத்துடன் இரண்டாவது இன்னிங்சிலும் சேர்த்து 119 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் அவர் பெற்றிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டின் போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை அஸ்வின் பகிர்ந்துள்ளார். அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசி இது பற்றி கூறியிருக்கிறார். தமிழகத்தில் எவ்வளவு தூரம் சினிமாக்கள் மீது நாம் பைத்தியமாக இருக்கிறோம் என்பதை இந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன என்று கூறிய அஸ்வின், “பவுண்டரி லைனில், நின்று கொண்டிருந்த போது ஒருவர், ‘தல அஸ்வின் அஸ்வின்’ என்று அழைத்தார். ‘என்னப்பா?’ என்று கேட்டதற்கு திடீரென, ‘வலிமை அப்டேட் எப்படி?’ என்று கேட்டதாகவும், ‘என்னய்யா சொல்ற? வலிமை அப்டேட் எப்படியா?’ என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பின்னர் கூகுளில் நான் தேடிப் பார்த்தபோது தான் எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.
அடுத்த நாள் மொயீன் அலி வந்தார். வாட் இஸ் வலிமை? என்று என்னிடம் கேட்டார். அப்போது தான் மொயீனும் அதே இடத்தில் நிற்கும் போது அவரிடம் வலிமை அப்டேட் கேட்டிருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவந்தது. மொத்தத்தில் கலக்கிட்டீங்க. மாஸ்டர் படம் கிரேட். ஆனால் இங்கிலாந்து வீரரிடம் வலிமை அப்டேட் கேட்டதெல்லாம் அவுட் ஸ்டாண்டிங் பா!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Ashwin doing the #VaathiComing shoulder drop at the Chepauk! Happy ending to a proper cricket festival in Chennai! 🤩🤩🤩🔥🔥🔥🔥 #INDvENG #Master pic.twitter.com/VEUQnEBoDL
— Srini Mama (@SriniMaama16) February 16, 2021
இதேபோல் டெஸ்ட் போட்டிக்கு நடுவே அஸ்வின் மைதானத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடன அசைவுகளை செய்து ரசிகர்களை உற்சாகத்தில் திளைக்க வைத்தார். இந்த வீடியோவும் இணையதளத்தில் பரவி வருகிறது.
ALSO READ: 'கவுதம் மேனன்' பட அறிமுக நாயகிக்கு நடந்த 2வது திருமணம்!