நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து வில்லா-2 என பல படங்களில் நடித்தாலும், தெகிடி திரைப்படம் மூலம் அழுத்தமான நடிப்பை கொடுத்திருந்தார். அதன்பிறகும் கூட்டத்தில் ஒருத்தன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வந்த அசோக் செல்வனுக்கு ரித்திகா மற்றும் வாணி போஜன் உடன் இணைந்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்து உருவான ஓ மை கடவுளே திரைப்படம் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
காதல் ரொமான்ஸ் காமெடி ததும்ப இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்தப்படம் ZEE5 ஓடிடியில் தற்போது வெளியாகி ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் போதை ஏறி புத்தி மாறி தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் அசோக் செல்வன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அறிமுக நாயகன் தீரஜ் நடிப்பில் இயக்குனர் சந்துரு என்பவர் முதல் படமாக இயக்கிய திரைப்படம் போதை ஏறி புத்தி மாறி.
போதை மருந்தை உட்கொள்வதால் ஏற்படும் சிக்கலை வைத்து உருவான இந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தை தயாரித்தவர் தான் ஸ்ரீநிதி சாகர். Rise East Entertainments Pvt Ltd என்கிற இந்த தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் தான் தற்போது நடிகர் அசோக்செல்வன் அடுத்து நடிக்கவிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த திரைப்படத்தை கார்த்திக் இயக்குவார் என்றும். ஜார்ஜ் வில்லியம்ஸ் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்வார் என்றும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
ALSO READ: “Sir... ஒரே ஒரு Selfie.. ப்ளீஸ்!”.. ஹன்சிகா யார் கிட்ட கெஞ்சுறாங்க பாருங்க! ViralVideo!