அப்பா - மகள் பாச சம்பவத்தால் நெகிழ்ந்து போன பிரபல நடிகர்! கலங்க வைக்கும் வைரல் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி பகிர்ந்துள்ள வீடியோ வைரல் ஆகி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

ஆஷிஷ் வித்யார்த்தி பகிர்ந்த பாச சம்பவம் | ashish vidhyarthi shares an emotional video about father and daughter.

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருபவர் ஆஷித் வித்யார்த்தி. தமிழில் இவர் நடித்த தில், கில்லி, அநேகன் உள்ளிட்ட படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி கொடுத்தன. பெங்காலி, மராத்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வரும் இவர், சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஆஷிஷ் வித்யார்த்தி எமோஷனலான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, 'இன்று காலை மும்பையில் இருந்து பூனேவுக்கு பயணித்து கொண்டிருந்தேன். அப்போது ட்ரைவர் எங்களிடம், ஒரு கால் செய்ய வேண்டும் என ஃபோன் கேட்டார். ஃபோனை வாங்கிய அவர் தன் மகளுக்கு கால் செய்து அவளை எழுந்திருக்க சொல்ல, அப்பா.. நான் உங்களை 5 மணிக்கு எழுப்ப சொன்னால், இப்போது எழுப்புறீங்க என எதிர்முனையில் மகள் கூறினார். பரவாயில்லை, நீ இப்போது எழுந்து உணவு தயார் செய்துவிட்டு கிளம்பு என அந்த அப்பா சொல்ல, நான் 4 மணிக்கே எழுந்து உணவு தயார் செய்துவிட்டு, இப்போது பள்ளிக்கு கிளம்பி கொண்டிருக்கிறேன் என அந்த குழந்தை சொல்லியது. இதை கேட்ட நாங்கள், உங்கள் மகள் வளர்ந்துவிட்டால் என சந்தோஷமடைந்தோம். பிறகு நான் அவரிடம் உங்கள் வீட்டில் யாரெல்லாம் இருக்கிறீர்கள் என கேட்ட போது, எனது 12 வயது மகளும் 7 வயது மகனும்தான், கடந்த டிசம்பர் 25 அன்று என் மனைவி இறந்துவிட்டாள் என்று அவர் கூறினார். அதை அறிந்த பின்பு தான், வாழ்க்கையின் பொறுப்பை அவள் இந்த வயதிலேயே ஏற்றுக் கொண்டால் என்று தெரிந்து கொண்டோம். அதே நேரத்தில் தன் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக உழைக்கும் அப்பாவை கண்டு நெகிழ்ந்து போனேன்' என்று அவர் நெகிழ்ச்சியான வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

ஆஷிஷ் வித்யார்த்தி பகிர்ந்த பாச சம்பவம் | ashish vidhyarthi shares an emotional video about father and daughter.

People looking for online information on Ashish Vidyarthi will find this news story useful.