தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் கன்னடத் திரையுலகிலும் திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்து வரும் சம்பவங்கள் தென்னிந்திய திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றன.
அண்மையில்தான் தமிழ் திரையுலகில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தொடங்கி, தொடர்ந்து நகைச்சுவை நடிகர் விவேக், அவரை தொடர்ந்து இயக்குநர் தாமிரா மற்றும் மிக சமீபத்தில் இயக்குநர் கே.வி.ஆனந்த் உள்ளிட்டோர் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவங்கள் திரைத்துறையை மீளா சோகத்தில் ஆழ்த்தின.
இதேபோல் கன்னடத் திரையுலகிலும் தற்போது ஒரு சோக சம்பவம் நடந்திருக்கிறது. கன்னட திரையுலகில், 34 வயதேயான இயக்குநர் நவீன் தற்போது மரணம் அடைந்திருக்கிறார். இவர் 'One Day in 2011' என்கிற படம் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமான இளம் இயக்குநர். இவருடைய மரணத்தை அடுத்து இவருடைய உடல் இவருடைய சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் கன்னட திரையுலகில் பிரபல இயக்குனர் மஸ்தான் உயிரிழந்தார். அதே ஏப்ரல் மாதத்தில் பிரபல கன்னட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் மஞ்சுநாத் உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவங்கள் அடுத்தடுத்து தென்னிந்திய திரையுலகை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளனர்.
ALSO READ: தன் பட இயக்குநரைத் தொடர்ந்து குடும்பத்தில் ஒருவரை பறிகொடுத்த சோகத்தில் ‘கோ’ பியா பாஜ்பாய்