குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜன ரஞ்சகமான படங்களை இயக்குவதில் பெயர்பெற்றவர் சுந்தர் சி.
இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை 2-ஆம் பாகம் போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும், குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள்.
அரண்மனை முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா நடிப்பில் அரண்மனை 3-ஆம் பாகம் திரைப்படம் உருவாக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராகி உள்ளது.
ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா, மனோபாலா, சம்பத், சாக்ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் இந்த திரைப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
The super fun #Lojakkumojakku is out now. 🥳🎼
Listen to it now- https://t.co/WP3qrp3znJ
Sung by #Mukesh & Lyrics by #MohanRajan#SundarC @RedGiantMovies_@Udhaystalin @arya_offl @khushsundar @CSathyaOfficial @RaashiiKhanna_ @immasterdinesh @saregamasouth @RIAZtheboss pic.twitter.com/UfPfFQpxla
— Red Giant Movies (@RedGiantMovies_) September 22, 2021
இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான 'லொஜ்ஜக்கு மொஜ்ஜக்கு பஜ்ஜக்கு' எனும் வரிகளுடன் தொடங்கும் பாடல் இன்று வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் நடித்த ‘போக்கிரி’ படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசும் பிரபலமான இந்த வசனம் பலராலும் மறக்க முடியாது. அவருடைய வசனங்கள் எப்போதும் ட்ரெண்டில் இருப்பது போலவே, இன்று வெளியாகியுள்ள இந்த பாடலும் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. பாடகர் முகேஷ் இந்த பாடலை பாடியுள்ளார். பாடலாசிரியர் மோகன் ராஜன் இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கும் இந்த படத்துக்கு UK செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் C.சத்யா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு பணியை மேற்கொள்கிறார்.
பீட்டர் ஹெய்ன், தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ் ஆகியோர் சண்டைப்பயிற்சியினை அளிக்கின்றனர். பிருந்தா மற்றும் தினேஷ் மாஸ்டர்கள் இந்த படத்துக்கு நடனம் அமைக்கின்றனர். ரியாஸ் கே அஹ்மத் மக்கள் தொடர்பு பணிகளை கவனித்துக் கொள்கிறார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.