www.garudavega.com

ஆர்யா, சுந்தர்.சி-யின் அரண்மனை-3.. முதல் 2 பாகங்களை விட பிரம்மாண்டம்.... தெறிக்கவிடும் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் திரைப்படம் ‘அரண்மனை-3’.

Arya Sundar C vivek yogibabu aranmanai3 ready to release

தமிழில் நகைச்சுவை கமர்ஷியல் படங்களுக்கு, புதிய இலக்கணம் தந்தவராக பார்க்கப்படுபவர் இயக்குநர் சுந்தர்.சி. இவரது எந்த ஒரு படத்தையும், எப்போது பார்த்தாலும், நம் மன அழுத்தங்கள் நீங்கி புதிய புத்துணர்ச்சி உருவாகும்.

குடும்பத்துடன் பார்க்கத் தகுந்த, கவலை மறந்து சிரித்து கொண்டாடும் வகையிலான பொழுது போக்கு திரைப்படங்களை தருபவர் சுந்தர்.சி.

இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை-2 போன்ற பேய் படங்கள், அவற்றில் இருந்த நகைச்சுவையை காட்சிகள் அனைத்துமே குடும்பங்களும், குழந்தைகளும் கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்டது. அரண்மனை படத்தின் முதல் இரண்டு பாகங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், ஆர்யா நடிக்க, அரண்மனை-3 படம் ரிலீஸுக்கு ரெடியாகி உள்ளது.

அரண்மனை-3, முதல் இரண்டு பாகங்களை விட இரு மடங்கு பட்ஜெட்டில் மிக பிரமாண்டமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் நட்சத்திர மற்றும் நகைச்சுவை பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

குறிப்பாக இவ்வருடம் நம்மை வட்டு பிரிந்த நகைச்சுவை மன்னன் சின்னக்கலைவாணர் விவேக், இப்படத்தில் மக்களை மகிழ்விக்கும் முழுமையானதொரு நகைச்சுவை பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஆண்டே முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது. முதல் முறையாக இயக்குநர் சுந்தர்.சி உடன் பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே 1.5 கோடி ரூபாய் செலவில், 300 தொழிலாளர்கள் உருவாக்கிய பிரமாண்ட செட்டில், 200 கலைஞர்கள் பங்கேற்க, 16 நாட்கள் படமாக்கப்பட்டது. படத்தின் அதி முக்கியமான, இந்த க்ளைமாக்ஸ் காட்சியின் CG பணிகள் மட்டுமே, 6 மாதங்கள் நடைபெற்றது.

முந்தைய இரு படங்களை விட, பிரமாண்ட பட்ஜெட்டிலும், வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையுடனும் இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் சமீபத்தில் முடிந்த நிலையில் படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த படத்தின் ஒளிப்பதிவை UK செந்தில்குமார் செய்துள்ளார். படத்தொகுப்பை ஃபென்னி ஆலிவர் கவனிக்கிறார். ஆவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு இப்படத்தினை தயாரித்துள்ளார்.  C.சத்யா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

ALSO READ: பாரதி கண்ணம்மா 'வெண்பா' வீட்ல குவா.. குவா! அப்பவும் 'அம்மணி' எடுத்த முடிவு! fans நெகிழ்ச்சி!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Arya Sundar C vivek yogibabu aranmanai3 ready to release

People looking for online information on Aranmanai, Aranmanai 2, Arya, Sundar C, Vivekh will find this news story useful.