ஆர்யா வேறு லெவல் உடற்கட்டுடன் இருக்கும் வீடியோவுடன், அவரின் அடுத்த படம் பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து இவர் தற்போது நடித்துள்ள படம் டெடி. இதில் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா ஜோடியாக நடித்துள்ளார். டிக்டிக்டிக் படத்தை இயக்கிய ஷக்தி சவுந்தர்ராஜன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் ஆர்யாவின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்யா பதிவிட்டுள்ளார். வெறித்தனமாக ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவுடன், ' இயக்குநர் பா.இரஞ்சித்தின் அடுத்த படமான சல்பேட்டாவில் பாக்ஸர்களை சந்திக்கும் நேரம் வந்துவிட்டது. என் சினிமா வாழ்க்கையில் இது சவாலான படமாக இருக்கும்' என அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது வொர்க் அவுட் வீடியோவில், ரஞ்சித் சார், நான் ரெடி என அவர் கூறியுள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவை முரளியும் ஸ்டன்ட் இயக்குநர்களாக அன்பறிவும் பணியாற்றுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
My love for sports coming alive on screen
All set to face the boxers in the ring with @beemji sir for our next 💪 It’s the most challenging film of my career. Loving the experience. #Ranjith sir is just phenomenal 😍😍😎 @Music_Santhosh @K9Studioz #AnbuArivu #Murali pic.twitter.com/1ejKMipNYh
— Arya (@arya_offl) February 20, 2020