வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் வருவதையொட்டி விஜய் டிவியில் ‘காதலே காதலே’ எனும் நிகழ்ச்சி வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பாகிறது.
விஜய் டிவி தொடர்களிலும், விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்குபெறும் கலைஞர்களிடையே நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அனைவரும் தாங்கள் மணம் செய்துகொண்ட தம்பதிகளுடனேயே கலந்துகொண்டனர். அவர்களிடம் இருக்கு காதல், அன்பு, புரிதல் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து சுவாரஸ்யமான போட்டிகளுடன் இந்த ஷோ நடந்திருப்பதாக தெரிகிறது.
பிக்பாஸ் புகழ் அர்ச்சனா தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் தம்பதிகளாகவே வருகை தந்து கலந்துகொண்டனர். கடந்த 2019 மார்ச் மாதம் காதல் திருமணம் செய்துகொண்ட ஆர்யா - சாயிஷா தம்பதி பங்கேற்ற இந்த ஷோ வரும் ஞாயிறு மதியம் 3:00 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாவதையொட்டி இந்த நிகழ்ச்சியின் புரோமோ விஜய் டிவியில் வெளியாகியிருக்கிறது.
காதலர் தின சிறப்பு 💞 காதலே காதலே 💞 - வரும் ஞாயிறு மதியம் 3:00 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KadhaleKadhale #ValentinesDaySpecial #VijayTelevision pic.twitter.com/KsdORnRU3c
— Vijay Television (@vijaytelevision) February 9, 2021
அதில் ஆர்யா காதலை பற்றி பேசும்போது, “உயிரோட இருந்தா நீ லவ் பண்ணி தான் ஆகணும்.. அது என்றுமே முடிவடையாத ஒரு ஃபீலிங்!” என்று குறிப்பிட்டுள்ளார். ஆர்யாவின் இந்த வசனங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ள ஆர்யா, ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘எனிமி’ திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.