விக்டர் இப்போது வேடன்... வெறித்தனமான மாஃபியா ப்ரொமோ... A கார்த்திக் நரேன் வேட்டை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஃபியா படத்தின் பாடல் ப்ரொமோ வெளியானது.

arunvijay karthik naren mafia song vedan vandhacho is out

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இதையடுத்து அரவிந்த் சாமி, ஸ்ரேயா, ஆத்மிகா ஆகியோர் நடிப்பில் நரகாசுரன் படத்தை இயக்கினார். பல்வேறு காரணங்களால் அது வெளிவராமல் போனது. இதை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கிய திரைப்படம் மாஃபியா. அருண்விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் மாஃபியா படத்தில் இருந்து வேடன் வந்தாச்சோ எனும் பாடலின் ப்ரொமோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. வேடன் வந்தாச்சோ என ஆரம்பிக்கும் இப்பாடலில் அருண்விஜய் பலரை அடித்து துவம்சம் செய்கிறார். வரும் வெள்ளிக்கிழமை முழுப்பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 21 இத்திரைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் தனுஷ் நடிக்கும் D43 படத்தை கார்த்திக் நரேன் இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor

Arunvijay karthik naren mafia song vedan vandhacho is out

People looking for online information on Arun Vijay, Karthick Naren, Mafia, Prasanna, Priya Bhavani Shankar, Vedan Vandhacho will find this news story useful.