பப்ளிக் எக்சாம் STARTS... மாணவர்களுக்கு குட்டி ஸ்டோரி ரைட்டர் சொல்லும் பாசிட்டிவிட்டி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று ப்ளஸ்-2 மாணவர்கள் எழுதும் பப்ளிக் எக்சாமுக்கு இயக்குநர் அருண்ராஜா காமராஜ் ஒரு முக்கியமான மெசேஜ் கொடுத்துள்ளார்.

மாணவர்களுக்கு அருண்ராஜா சொல்லும் மெசேஜ் | arunraja kamaraj's advice to public exam students.

தமிழ் சினிமாவில் கனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். இயக்கம் மட்டுமின்றி பாடல் எழுவதிலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடலின் மூலம் இவர் பிரபலமடைந்தார். இதையடுத்து அண்மையில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் இவர் எழுதிய குட்டி ஸ்டோரி பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று முதல் ப்ளஸ்-2 பொதுத் தேர்வு துவங்குவதையடுத்து அருண்ராஜா காமராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'அடேய் பசங்களா... உயிர் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு முக்கியமான விஷயமல்ல பரீட்சை. ஜாலியா எழுதுங்கடே' என்று எழுதப்பட்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். குட்டி ஸ்டோரி பாடலை போல பாசிட்டிவ் மெசேஜ் சொல்லும் அருண்ராஜா காமராஜின் பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

மாணவர்களுக்கு அருண்ராஜா சொல்லும் மெசேஜ் | arunraja kamaraj's advice to public exam students.

People looking for online information on Anirudh Ravichander, Arunraja Kamaraja, Kutti story, Lokesh Kanagaraj, Master, Vijay will find this news story useful.