மலேசியா முருகன் கோயிலில் அருண் விஜய்.. தீயாய் பரவும் வைரல் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண் விஜய் மலேசியா முருகன் கோவிலுக்கு சென்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

Arun Vijay prayers at famous Lord Murgan temple at Batu Caves

யானை, அருண் விஜய் நடிக்கும் 33வது படமாகும்.  இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் செப்டம்பர் 9ஆம் தேதி விநாயகர் சதூர்த்திக்கு வெளியானது. மேலும் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள், முன்னோட்டம் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.

நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடித்துள்ளார். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன்  இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

Arun Vijay prayers at famous Lord Murgan temple at Batu Caves

இந்த படத்தில் அருண்விஜய் உடன், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்காக  இராமேஸ்வரம், தூத்துகுடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில்  படப்பிடிப்பு நடந்து முடிந்தது. படத்தின் வெளியீட்டுக்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Arun Vijay prayers at famous Lord Murgan temple at Batu Caves

இந்நிலையில் படத்தின் ரிலீசை முன்னிட்டு மலேசியாவில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கொயிலுக்கு சென்று மலையேறி சாமி தரிசனம் செய்தார் இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Arun Vijay prayers at famous Lord Murgan temple at Batu Caves

யானை படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை KKR சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.  இந்த யானை படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் OTT டிஜிட்டல் உரிமையை ஜி குரூப் கைப்பற்றி உள்ளது. ZEE5 OTT & ZEE தமிழ் தொலைக்காட்சிகளில் இந்த படம் வரும் நாட்களில் ஒளிபரப்பாகும்.

Arun Vijay prayers at famous Lord Murgan temple at Batu Caves

யானை படம் சென்சார் போர்டால் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. யானை படம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Arun Vijay prayers at famous Lord Murgan temple at Batu Caves

People looking for online information on Arun Vjay, Batu Caves, Hari, Lord Murgan, Malaysia, Malaysia Murugan, Yaanai will find this news story useful.