யானை படம் சென்சாருக்கு தயாராகி வருவதாக நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
Also Read | வேற லெவல்… ‘DON’ சக்ஸஸ் பார்ட்டி… சிவகார்த்திகேயன் & SJ சூர்யாவுடன் படக்குழுவினர் … வைரல் Pics
யானை…
நடிகர் அருண் விஜய்யின் சமீபத்தைய படங்களான தடையறத் தாக்க, மலை மலை மற்றும் தடம் ஆகிய படங்களின் வெற்றியின் மூலம் முன்னணி நடிகராகியுள்ளார். இந்நிலையில் முதல் முறையாக அவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கும் யானை திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
முன்னணிக் கலைஞர்கள்…
நடிகர் அருண் விஜய், இயக்குநர் ஹரி கூட்டணியில் “யானை” திரைப்படம் முழு படப்பிடிப்பு பணிகளும் முடிந்து, ரிலீஸூக்கு தயாராக உள்ளன. இப்படத்திற்காக இராமேஸ்வரம், தூத்துகுடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இந்த படத்தில் அருண்விஜய் உடன், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.
தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமம்…
யானை படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை KKR சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்த யானை படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் OTT டிஜிட்டல் உரிமையை ஜி குரூப் கைப்பற்றி உள்ளது. ZEE5 OTT & ZEE தமிழ் தொலைக்காட்சிகளில் இந்த படம் வரும் நாட்களில் ஒளிபரப்பாகும்.
அருண் விஜய் வெளியிட்ட தகவல்…
யானை திரைப்படம் முதல் மே 6-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிகக்பப்ட்டது. ஆனால் ரிலீஸ் நெருங்கிய நேரத்தில் ’யானை படம் வினியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த படம் ஜூன் மாதம் 17 ஆம் தேதிக்கு ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என அறிவிகக்ப்பட்டது. இந்நிலையில் தற்போது யானை திரைப்படம் ‘சென்சாருக்கு தயாராகி வருவதாகவும், விரைவில் டிரைலர் ரிலீஸ் ஆகும்’ எனவும் படத்தின் நாயகன் அருண் விஜய் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8