கார்த்திக் நரேனின் 'மாஃபியா: அத்தியாயம் 1' படத்தில் கடைசியாக நடித்த அருண் விஜய், தற்போது ஜி.என்.ஆர் குமாரவேலன் இயக்கத்தில் 'சினம்', நவீன் இயக்கத்தில் 'அக்னி சிறகுகள்', அறிவழகன் இயக்கத்தில் 'பார்டர்' படங்களில் நடித்துள்ளார்.
தனது மாமா இயக்குனர் ஹரியுடன் அருண் விஜய் முதல் முறையாக இணைந்துள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்போது 'ஏ.வி 33' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. அருண் விஜய் இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார், மற்ற நடிகர்களில் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராதிகா சரத்குமார்,புகழ், அம்மு அபிராமி மற்றும் 'கேஜிஎஃப்' புகழ் கருடா ராம் ஆகியோர் அடங்குவர்.
இதில் அம்மு அபிராமி ஏற்கனவே தனுசுடன் அசுரன் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
📽🎬 #AV33!!#DirectorHARI @priya_Bshankar @gvprakash @editoranthony @gopinathdop @DrumsticksProd @iYogiBabu @prakashraaj @realradikaa @Ammu_Abhirami
— ArunVijay (@arunvijayno1) July 28, 2021