KAAPAN USA OTHERS

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அருண் விஜய் காயம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபாஸூடன் அருண் விஜய் நடித்து வெளியான 'சாஹோ' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஷரத்தா கபூர், ஜாக்கி ஷெராஃப், உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க சுஜித் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

Arun Vijay Got Injured in GNR Kumaravelan's AV 30

இதனையடுத்து அருண் விஜய் கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'மாஃபியா' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரசன்னா , பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இதனையடுத்து அருண் விஜய் ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அருண் விஜய்யின் 30 வது படமான இதில், பலக் லால்வாணி ஹீரோயினாக நடிக்க, மூவிங் சைட்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டபோது அருண் விஜய்யிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 'வேலையில் இருக்கும் போது அடிபட்டால் நான் அப்போது வலியை உணர்ந்ததில்லை' என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில் அருண் விஜய்க்கு ஸ்டண்ட் சில்வா காயத்திற்கு மருந்திடுகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Arun Vijay Got Injured in GNR Kumaravelan's AV 30

People looking for online information on Arun Vijay, GNR.Kumaravelan, Palak Lalwani will find this news story useful.