இயக்குநர் மகிழ்திருமேனியின் ‘தடம்’ திரைப்படத்தை தொடர்ந்து அருண் விஜய் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அதில், அருண் விஜய் மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படத்தை ‘ஹரிதாஸ்’ படத்தின் இயக்குநர் GNR குமாரவேலன் இயக்கி வருகிறார். ‘சினம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது.
இப்படத்தில் பாரி வெங்கட் என்ற கேரக்டரில் போலீஸ் அதிகாரியாக அருண் விஜய் நடித்து வருகிறார். மூவி ஸ்லைட்ஸ் நிறுவனத்தின் பேனரில் ஆர்.விஜயகுமார் தயாரித்து வரும் இப்படத்தில் பல்லக் லால்வானி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘சினம்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் பணிகள் நேற்று (நவ.20) நிறைவடைந்துள்ளதை படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து, படக்குழுவிற்கும் படத்தில் நடித்த அனுபவத்திற்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
இது தவிர, கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாஃபியா’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் அருண் விஜய் முடித்துள்ளார். ‘பாக்ஸர்’, நவீனின் ‘அக்னி சிறகுகள்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
Done with the 2nd schedule of #SINAM y’day! Thanks to all the wonderful actors and crew for their dedication n co-operation! Looking fwd to the next soon.. 👍 @arunvijayno1 @gnr_kumaravelan @gopinath_dop @silvastunt @pallaklalwani @ShabirMusic @DoneChannel1 pic.twitter.com/Umcj2N2eLP
— MovieSlidesPvtLtd (@MSPLProductions) November 21, 2019