www.garudavega.com

அருண் விஜய் & ஏமி ஜாக்சனின் ‘அச்சம் என்பது இல்லையே மிஷன் சாப்டர் 1’ - வெளியான ரிலீஸ் அப்டேட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘அச்சம் என்பது இல்லையே’ - மிஷன்  சாப்டர் 1 படத்தின் உரிமத்தை பெற்றுள்ளார்.

Arun Vijay Achcham Enbathu Illayea MISSION CHAPTER 1 Lyca release

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் உரிமையை  பெற்று, உலகம் முழுவதும் வெளியிட உள்ளார். படத்தினை எம். ராஜசேகர் & எஸ்.சுவாதி தயாரித்துள்ளனர்.

சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் எப்போதும் நல்ல படங்களுக்கு மதிப்பு தரக்கூடியது. தனித்துவமான கதைகள் மற்றும் நம்பிக்கைக்குரிய உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்து வெற்றிகரமாக விநியோகித்து வருகிறது. இதன் மூலம் இதுபோன்ற திட்டங்களுக்கு பிரம்மாண்டமான வெற்றியை சேர்க்கிறது. லைகா புரொடக்‌ஷனின் இந்த லீக்கின் சமீபத்திய வரவாக எம்.ராஜசேகர் & எஸ் சுவாதி தயாரிப்பில், நடிகர் அருண் விஜய்யின் 'அச்சம் என்பது இல்லையே' திரைப்படம் இணைந்துள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைப் பார்த்தப் பிறகு, அனைத்துத் தரப்பிலான பார்வையாளர்களையும் கவரும் அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்துள்ளது. மொழிகளைத் தாண்டி, அனைத்து தரப்பினருக்கும் போய் சேரும் வகையிலான கதையம்சத்தைக் கொண்டுள்ளதால், நான்கு வெவ்வேறு மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட லைகா முடிவு செய்துள்ளது. படத்தின் ட்ரைய்லர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.  

Arun Vijay Achcham Enbathu Illayea MISSION CHAPTER 1 Lyca release

பாராட்டும்படியான படைப்புகளை சரியானத் திட்டமிடலுடன் கொடுக்கக்கூடிய இயக்குநர் விஜய்யின் திறமை, அவரைத் தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான இயக்குநராக மாற்றி இருக்கிறது. 70 நாட்களில் அவர் சென்னை மற்றும் லண்டனில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஏமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் திரைக்கு வருகிறார். மலையாளத் திரையுலகில் தனது நடிப்புத் திறனுக்கு பல பாராட்டுகளைப் பெற்ற நடிகை நிமிஷா சஜயனும் இந்தப் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை எம்.ராஜசேகர் & எஸ் சுவாதி தயாரித்துள்ளனர் மற்றும் வம்சி, பிரசாத் கோதா மற்றும் ஜீவன் இணைந்து தயாரித்துள்ளனர்.

நடிகர்கள்:

அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

இயக்கம்: விஜய்,

லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர்: ஜி.கே.எம். தமிழ் குமரன்,

தயாரிப்பு: சுபாஸ்கரன், எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி,

இணைத்தயாரிப்பு: சூர்யா வம்சி பிரசாத் கோதா- ஜீவன் கோத்தா,

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,

கதை & திரைக்கதை: ஏ.மகாதேவ்,

வசனம்: விஜய்,

ஒளிப்பதிவு: சந்தீப் கே விஜய்,

எடிட்டிங்:  அந்தோணி,

ஸ்டண்ட்: ஸ்டண்ட் சில்வா,

கலை இயக்குநர்: சரவணன் வசந்த்,

ஆடை வடிவமைப்பாளர்: ருச்சி முனோத்,

ஒப்பனை: பட்டணம் ரஷீத்,

நிர்வாகத் தயாரிப்பாளர்: வி கணேஷ்,

தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: கே மணி வர்மா,

நிர்வாகத் தயாரிப்பாளர்கள் (யுகே): சிவகுமார், சிவ சரவணன்,

தயாரிப்பு நிர்வாகி - மனோஜ் குமார் கே,

ஆடை வடிவமைப்பாளர்:  மொடப்பள்ளி ரமணா,

ஒலி வடிவமைப்பு: எம்.ஆர்.ராஜகிருஷ்ணன்,

VFX – D நோட்,

ஸ்டில்ஸ்: ஆர் எஸ் ராஜா,

Promotion & Strategies: ஷியாம் ஜாக்,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி'ஒன்,

விளம்பர வடிவமைப்பாளர் - பிரதூல் என்.டி

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Arun Vijay Achcham Enbathu Illayea MISSION CHAPTER 1 Lyca release

People looking for online information on A L Vijay, Achcham Enbathu Illayea, Achcham Enbathu Illayea - MISSION CHAPTER 1, Amy Jackson, Arun Vijay, Lyca Productions will find this news story useful.