இயக்குனரும் பாடலாசிரியருமான அருண் ராஜா காமராஜ் தற்போது நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை இயக்கிமுடித்துள்ளார்.
Also Read | “உங்க குடும்ப பெருமைய காப்பாத்திட்டீங்க”…. அனிருத்தை வியந்து பாராட்டிய கமல்ஹாசன்!
அருண் ராஜா காமராஜா…
நடிகர் சிவகார்த்திகேயனின் கல்லூரி நண்பரும் இயக்குனர் நெல்சனின் உதவியாளருமான அருண் ராஜா காமராஜ் ’கனா திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர். அருண்ராஜா காமராஜா தொடக்ககாலத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். தொடர்ந்து திரைத்துறையில் நடிகராகவும் வசனகர்த்தாவாகவும் பாடலாசிரியராகவும் வலம் வந்த அருண்ராஜா காமராஜா சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் கனா திரைப்படத்தை இயக்கி வெற்றியடைந்தார். கனா திரைப்படம் பெற்ற மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு சீனாவில் ரிலீஸானது. 2.0 படத்துக்குப் பிறகு சீனாவில் வெளியான தமிழ்ப்படமாக கனா சாதனைப் படைத்தது.
கனா படத்தின் வெற்றி…
கனா படத்தின் வெற்றிக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தினை அருண் ராஜா இயக்கியுள்ளார். இந்த படம் மே 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆர்ட்டிகிள் 15 படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் சென்சார் ஆன இந்த படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியாகியுள்ள படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
பிரத்யேக நேர்காணல்…
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு இயக்குனரும் பாடலாசிரியருமான அருண் ராஜா காமராஜ் அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் தனது சினிமா வாழ்க்கை குறித்த பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் பாடலாசிரியராவும், பாடகராகவும் வளர்ந்து வந்த நிலையில் இயக்குனராக மாறியது குறித்து பேசும்போது “பாட்டெழுதுறது சௌகர்யமாகவே இருந்துச்சு… அதையே பின் தொடர்ந்து போயிருந்தன்னா…. அதுலயே சம்பாதிச்சு ஒரு வீடு வாங்கி இருப்பேன். 50 பாட்டுங்குறது 100 பாட்டா ஆகிருக்கும். இயக்குனர் ஆகி இருக்க முடியாது. நாம வந்ததே இயக்குனர் ஆகதானே… நம்ம கம்போர்ட் ஜோன்லயே இருந்துட முடியாது” என நம்பிக்கையோடு பேசியுள்ளார். இதையடுத்து இந்த நேர்காணல் வீடியோ இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8